Tamannaah Marriage: முதல்ல மருத்துவர்… இப்போ தொழிலதிபர்… விளக்கும் தமன்னா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamannaah Marriage: முதல்ல மருத்துவர்… இப்போ தொழிலதிபர்… விளக்கும் தமன்னா

Tamannaah Marriage: முதல்ல மருத்துவர்… இப்போ தொழிலதிபர்… விளக்கும் தமன்னா

Aarthi V HT Tamil
Dec 08, 2022 12:10 PM IST

நடிகை தமன்னா திருமணம் குறித்து தான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.

தமன்னா
தமன்னா

தமன்னா மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவல் வெறும் வதந்தி என்று தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா இது குறித்து பேசுகையில், "நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடம் சினிமாவில் நீடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற வித்தியாசம் பார்க்காமல், யாரோடும் சேர்ந்து நடிக்க தயார். எனது கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மட்டுமே பார்க்கிறேன். சகஜமாகவே பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திருமணத்தைப் பற்றி கேட்பார்கள்.

எங்கள் வீட்டில் கூட என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். வரன் கூட தேடுகிறார்கள். ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எ

ன் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம். ஏற்கனவே எனக்கு ஒரு டாக்டருடன் திருமணம் செய்து வைத்தார்கள்.

இப்போது ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்கிறார்கள். தமன்னா. அந்த நேரம் வரும்போது நானே சொல்கிறேன்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.