Tamannaah Bhatia: ‘அச்சச்சோ என்ன கால்ல விழுந்திட்டீங்க’- ரசிகரால் நெகிழ்ந்த தமன்னா - வைரலாகும் வீடியோ!-tamannaah bhatia turns emotional as fan reveals tattoo of actress face touches her feet - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamannaah Bhatia: ‘அச்சச்சோ என்ன கால்ல விழுந்திட்டீங்க’- ரசிகரால் நெகிழ்ந்த தமன்னா - வைரலாகும் வீடியோ!

Tamannaah Bhatia: ‘அச்சச்சோ என்ன கால்ல விழுந்திட்டீங்க’- ரசிகரால் நெகிழ்ந்த தமன்னா - வைரலாகும் வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 27, 2023 01:32 PM IST

தமன்னாவின் காலில் விழுந்த ரசிகையின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tamannaah Bhatia Turns Emotional As Fan Reveals Tattoo of Actress Face Touches Her Feet
Tamannaah Bhatia Turns Emotional As Fan Reveals Tattoo of Actress Face Touches Her Feet

அண்மையில் தமன்னா ஏர்போர்ட் ஒன்றிற்கு வந்திருந்த போது அவருடைய பரமரசிகை ஒருவர் பூங்கொத்துடன் வந்து அவரைச் சந்தித்தார். தமன்னாவை பார்த்த ஆர்ப்பரிப்பில் நெகிழ்ந்து போன அந்த ரசிகை யாரும் எதிர்பாராத வண்ணம் அவர் காலில் விழுந்தார். தொடர்ந்து தன்னுடைய இடது கையில் தமன்னாவின் முகத்தை டாட்டூ குத்தியிருப்பதைக் காண்பித்து பூரித்தார்.

இதனைக்கண்டு நெகிழ்ந்து போன தமன்னா அந்த ரசிகையை கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளாங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2  சீரிஸ் வருகிற ஜூன் 29 ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இதனை புரமோட் செய்யும் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார் தமன்னா.

இந்த சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கி இருந்தனர். இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாம் பாகமானது வருகிற ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கஜோல், நீனா குப்தா, தில்லோடமா ஷோம் விஜய் வர்மா, அம்ருதா சுபாஷ், மிருணாள் தாக்கூர், தமன்னா, அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த சீரிஸை இயக்குநர்கள் கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ், அமித் ரவீந்தர்நாத் சர்மா ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். முந்தைய பாகத்தை போலவே உருவாகி இருக்கும் இந்த சீரிஸின் டீசர் சமூகவலைதளங்களில் வைரலானது. அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட ட்ரெய்லரும் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றது. 

இந்த சீரிஸில் தமன்னாவுடன் நடித்திருக்கும் விஜய் வர்மாவும் அவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், அண்மையில் தமன்னா கொடுத்த நேர்காணல் ஒன்றில் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம். அதன் பின்னர் தான் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என சொல்ல முடியாது. ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது அவசியம்.

அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என என்னால் உணர முடிந்தது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் பார்த்தேன். அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறி இருக்கிறார் என்று வெளிப்படையாக பேசினார்.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.