தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Taj: Divided By Blood Review: Starring Dharmendra, Naseeruddin Shah, Aditi Rao Hydari, Aashim Gulati, Rahul Bose, Taha Shah Badussha, Shubham Kumar Mehra,

Taj Review: மண்ணா? பெண்ணா? முகலாயர்களின் இன்னொரு முகம் சொல்கிறதா ‘தாஜ்’?

HT Tamil Desk HT Tamil
Mar 06, 2023 12:38 PM IST

Taj: Divided by Blood: ஒரே நேரத்தில் இந்து அரசனின் எதிர்ப்பு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பு என இரு வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, அடுத்த சக்கரவர்த்தி யார் என்கிற சங்கடம் என அக்பர் தவிக்கிறார்.

தாஜ் வெப்சீரிஸ் போஸ்டர்
தாஜ் வெப்சீரிஸ் போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

முகலாய பேரரசன் ஜலாலுதீன் முகமது அக்பர் பற்றி நாம் பல கதைகளில், படங்களில் அறிந்திருக்கிறோம். மதங்களை கடந்த மன்னன், மனித நேயம் மிக்கவர், மகத்துவமானவர், மக்களின் மன்னர் என்றெல்லாம் அக்பரைப் பற்றிய பல படங்கள் வந்துவிட்டன. 

ஆனால், இது அக்பரின் முதுமை காலத்தில், அவரின் வாரிசுகளுக்கு இடையே நடந்த வரலாற்றை சொல்லும் கதை. மண்ணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் ஆசையில் ஒரு சாம்ப்ராஜ்யம் எத்தனை சரிவுகளை, சங்கடங்களை சந்திக்கிறது என்பது தான் கதையின் கரு.

பல மனைவிகள் இருந்தும், ஒரு குழந்தை கூட இல்லாத அக்பருக்கு, அவர் செய்த பாவங்களின் பலன் என அறிவுறுத்துகிறார் ஒரு குரு. அதை உணர்ந்த பின் அவருக்கு மூன்று மகன்கள் பிறக்கின்றனர். மூவரில் ஒருவன் ஜோதாவின் மகன். அவன் எந்நேரமும் மது, மங்கை என சுற்றி வரும் வீரன். இரண்டாவது மகன் முரடன், மூன்றாவது மகன் ஒரு அம்மாஞ்சி. அவனது தாய் யார் என்று தெரியாது, ஆனால் இஸ்லாமியத்தில் தீவிர பற்றுக் கொண்டவன். 

கிட்டத்தட்ட கடைசி காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் பாபர், தன் கடந்த கால பெருமைகளுடன் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு மனைவிகளுக்கும், தாசிகளுக்கும் பஞ்சமில்லாமல் பொழுது போகிறது. அக்பரின் இந்து மத அரவணைப்பு , தீவர இஸ்லாமிய பற்றாளனான அவரது தம்பிக்கு எரிச்சலூட்ட, அக்பருக்கு எதிராக படை திரட்டுகிறார். 

இதற்கிடையில் முகலாய சாம்ராஜ்யத்தின் அடுத்த சக்கரவர்த்தி யார் என்கிற கேள்வி வரும் போது, மூன்று மகன்களில் திறமையானவனுக்கே அரியணை என்கிறார் அக்பர். தனக்கு எதிராக அணி திரட்டும் தன் சகோதரனை கைது செய்து வருபவருக்கே அரியணை என்கிறார். 

மூன்று சகோதரர்களும் சென்று போரிட்டு, வெற்றி பெறுகின்றனர். ஆனால், அவர்களின் சித்தப்பா தப்பி விடுகிறார். அதன் பின் மீண்டும் அரண்மனை திரும்பும் அவர்களுக்கு ரஜபுத்திர இந்து அரசன் ராணா பிரதீப்பின் எதிர்ப்பு வருகிறது. 

அவரிடத்தில் சமரசம் செய்ய அக்பர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அனைத்து மதமும் ஒன்று என்று கூறி, ‘தீன் இலாஹி’ என்கிற மதத்தை உருவாக்குகிறார் அக்பார். இது இஸ்லாமியர்களிடம் கோபத்தை அதிகரிக்கிறது. 

ஒரே நேரத்தில் இந்து அரசனின் எதிர்ப்பு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பு என இரு வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, அடுத்த சக்கரவர்த்தி யார் என்கிற சங்கடம் என அக்பர் தவிக்கிறார். இதற்கிடையில் அக்பர் தன் அரண்மனையில் ஒரு அடிமைப் பெண்ணை சகல வசதிகளுடன் சிறை வைத்திருக்கிறார்.  

அந்த பெண்ணை தற்செயலாக பார்க்கும், அக்பர்-ஜோதாவின் மகன் சலீம், அவள் மீது காதல் கொள்கிறான். இருவரும் ஜன்னலுக்கு இடையே நின்று காதலை வளர்க்கிறரா்கள். இறுதியில், அனார்கலி எனப்படும் எந்த பெண், பாபரின் மனைவி என்பதும், அவரது மூன்றாவது மகனின் தாய் என்பதும் தெரிய வருகிறது. 

தன் மனைவி அனார்கலி-மகன் சலீம் காதல் அக்பருக்கு கோபத்தை தர, சலீமை நாடு கடத்துகிறார். அனார்கலியை உயிரோடு சுவற்றில் புதைக்க உத்தரவிடுகிறார். காதலுக்கு உதவிய சலீமின் நண்பனை தூக்கிலிடுகிறார். பீர்பாலின் யோசனையில் சுவற்றில் புதைக்கப்படும் அனார்கலி, சலீமை தேடி தப்பிச் செல்கிறாள். 

தன் தாய் ஒரு வேசி என்றும், தன் சகோதரனை அவள் காதலிக்கிறார் என்கிற ஆத்திரத்தில் மதபோதகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்பரின் மூன்றாவது மகன், தன் தாயை கொலைசெய்கிறான். தடுக்க வரும் சலீமையும் கொன்று விட்டதாக எண்ணி செல்கிறான். 

அக்பரின் அமைச்சர் ஒருவரின் தந்திரத்தால், ராணா பிரதீப்பை கைது செய்ய சென்று அக்பரின் இரண்டாவது மகன் கொல்லப்படுகிறான்.  இப்போது, சலீம் இறந்துவிட்டான், இரண்டாவது மகனும் கொல்லப்பட்டுவிட்டான், இனி மூன்றாவது மகன் தான் அரியணை ஏறுவான் என்பதால், அதற்கு தாங்கள் தான் காரணம் என, அமைச்சரும், மத குருவும் வாக்கு வாதம் செய்கிறார்கள். 

ஆனால், ஜோதாவின் மகன் சலீம் இறக்கவில்லை. காப்பாற்றப்பட்டான். அவன் சிகிச்சையிலிருந்து மீண்டு, அக்பரின் மூன்றாவது மகனும், தனது சகோதரனுமான அனார்கலியின் மகனை பழி தீர்ப்பேன் என்பதோடு முடிகிறது முதல் பாகம். அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்போடு நிறைவடைந்திருக்கும் முதல் பாகம், கண்டிப்பாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

10 எபிசோடுகள், ஒவ்வொன்றும் தெரிந்த கதையை தெரியாத கோணத்தில் நகர்த்தி செல்கின்றன. பெண் மோகத்தில் அக்பரின் இன்னொரு பக்கத்தை அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள்.அக்பரின் முதுமை இப்படி தான் இருந்திருக்குமோ என்பது போல, அச்சு அசல் அக்பராக தோன்றுகிறார் நஸ்ரூதின் ஷா. சலீமாக வரும் அஷிம் குலாதியின் நடிப்பு வேறு லெவன். மது, மங்கை, காதல் என கவர்கிறார். 

அனார்கலியாக கதையை தாங்குவது அதிதி ராய். அக்பருக்கு இளம் மனைவியாக, அவரின் மகனுக்கு காதலியாக, அனார்கலியாக வாழ்ந்திருக்கிறார். இரண்டாவது மகன் மூரட்டாக வரும் டஷா ஷாவின் கதாபாத்திரம் கச்சிதம். மூன்றாவது மகனின் தோற்றமும், செயலும் அவ்வளவு இயல்பு.

ஜோதாவாக வரும் சந்தியா மிர்தூல், அக்பரின் தம்பியாக வரும் ராகுல் போஸ், பீர்பாலாக வரும் சுபோத், இன்னும் இன்னும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடைந்தெடுத்த தேர்வு. இரண்டாம் பாகத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘தாஜ்’. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்