தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tabla Musician Zakir Hussain Is Celebrating His 72nd Birthday

தபேலாவுக்காக படைக்கப்பட்ட கலைஞன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாகிர் உசேன் சார்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 09, 2023 06:17 AM IST

Zakir Hussain Birthday: தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் இன்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன்

ட்ரெண்டிங் செய்திகள்

மும்பையில் தபேலா இசைக் கலைஞருக்கு மகனாகப் பிறந்த இவர் மூன்று வயது முதல் தபேலா கற்கத் தொடங்கினார். ஐந்து வயதிலேயே தபேலா வாசிக்கத் தொடங்கி விட்டார். இளமைப் பருவம் முழுக்க மும்பையில் கழித்த இவர் உனக்கென தனி அடையாளம் வேண்டும் என தந்தை கூறியதை வேதவாக்காக எடுத்து தனக்கான ஒரு முத்திரையை பதிவிட்டார் ஜாகிர் உசேன்.

தனது 11 வயதில் இசை பயணத்தை தொடங்கிய ஜாகிர், 1970 ஆம் ஆண்டு திசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றார். அன்று தொடங்கி அவரது சர்வதேச பயணம் உலகம் முழுவதும் ஒலிக்க தொடங்கியது. ஆண்டுக்கு 150 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

1973 ஆம் ஆண்டு லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட் என்ற ஆல்பத்தை முதலில் வெளியிட்டார். தொடர்ந்து அதன் பிறகு இவர் வெளியிட்ட அனைத்து இசை ஆல்பங்களும் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன.

உலகம் முழுவதும் இருந்த புகழ்பெற்ற இசை கலைஞர்களுடன் கூட்டாக சேர்ந்து பல இசைக் குழுக்களை நிறுவினார். தபேலா பீட் சயின்ஸ் என்ற பிரம்மாண்ட இசைக்கு குழுவை அமெரிக்க இசைக்கலைஞர் பில் லாஸ் வெல்லுடன் சேர்ந்து நிறுவினார்.

அது மட்டுமில்லாமல் இன் கஸ்டி, தி மிஸ்டிக் மஸார் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியராக பணியாற்றினார்.

விருதுகள்

மலையாளத் திரைப்படமான வானப்பிரஸ்தம் என்ற படத்திற்கு இசையமைத்து அதில் நடித்தார். இது மும்பை சர்வதேச திரைப்பட விழா, இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா, தேசிய திரைப்பட விருது விழா ஆகியவற்றில் விருதுகளை பெற்றது.

இவரது 37 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 1992 ஆம் ஆண்டு கிராமி விருது பெற்றார். இது தாளவாத்திய பிரிவில் முதன் முதலாக வழங்கப்பட்ட விருதாகும். 2009 ஆம் ஆண்டு மீண்டும் கிராமி விருது பெற்றார். பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் இசை மேதையான ஜாகிர் உசேனுக்கு இன்று 72 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தபேலாவுக்காக இவர் படைக்கப்பட்டாரா? அல்லது இவருக்காக தபேலா படைக்கப்பட்டதா? என்று கேள்வி எழும் அளவிற்கு இசையோடு தன்னை பிணைத்து வாழ்ந்து வரும் கலைஞனுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்