Taapsee Marriage: வெள்ளாவி தேவதை டாப்ஸிக்கு திருமணம்; அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் பங்கேற்பு-taapsee pannu marries mathias boe in udaipur in an intimate wedding - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Taapsee Marriage: வெள்ளாவி தேவதை டாப்ஸிக்கு திருமணம்; அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் பங்கேற்பு

Taapsee Marriage: வெள்ளாவி தேவதை டாப்ஸிக்கு திருமணம்; அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் பங்கேற்பு

Marimuthu M HT Tamil
Mar 25, 2024 07:05 PM IST

Taapsee Marriage: டாப்ஸி பன்னு தனது நீண்டநாள் காதலரான மத்தியாஸ் போவுடன் திருமணம் செய்துகொண்டார்.

டாப்ஸி பன்னு தனது நீண்டநாள் காதலரான மத்தியாஸ் போவுடன் திருமணம் செய்துகொண்டார்.
டாப்ஸி பன்னு தனது நீண்டநாள் காதலரான மத்தியாஸ் போவுடன் திருமணம் செய்துகொண்டார்.

மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய திருமணத்திற்கான விழாக்களில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். 

தமிழில் ஆடுகளம் படத்தின்மூலம் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, பாலிவுட்டிலும் கால் பதித்து முத்திரைப் பதித்தார். அதன்பின், சுமார் 10 ஆண்டுகாலமாக டேட்டிங் செய்துகொண்டு இருந்த தனது நீண்டநாள் காதலரான மத்தியாஸ் போவுடன் டாப்ஸி, திருமணம் செய்துள்ளார். 

நியூஸ் 18-க்கு அளித்த டாப்ஸி பனுவின் நெருங்கிய உறவினர் அளித்த பேட்டியில், "உதய்பூரில் திருமணம் நடந்தது. இதில் மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு முந்தைய திருவிழா மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. தம்பதியினர் தங்கள் திருமணத்தில் எந்த ஊடகத்தினர் கலந்துகொள்வதையும் விரும்பவில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். இது முழுக்க முழுக்க பிரைவேசியாக அமைந்தது’’ என்றார். 

யார் யாரெல்லாம் பங்கேற்றார்கள் தெரியுமா?

இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, பல பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. "டாப்ஸியின், தோபாரா மற்றும் தப்பட் ஆகியப் படங்களில் நடித்த பவல் குலாட்டி திருமணத்தில் பங்கேற்றார். டாப்ஸியுடன் நெருக்கமான நண்பரான இயக்குநர் அனுராக் காஷ்யப் கலந்துகொண்டார்’’ என்றார். 

மேலும், இயக்குநர் அனுராக், மன்மர்ஜியான் மற்றும் தோபாரா போன்ற படங்களை இயக்கியுள்ளார் மற்றும் சாண்ட் கி ஆங்க் படத்தைத் தயாரித்துள்ளார். கனிகா தில்லான் மற்றும் அவரது கணவர் ஹிமான்ஷு சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர்.

சமீபத்தில், கனிகா இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டார். புகைப்படங்களில், அவர் வெளியில் போஸ் கொடுக்கும் போது இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளி நிற ஆடை அணிந்திருந்தார். அவரது கணவர் நீலம் மற்றும் வெள்ளை குர்தா, பைஜாமா மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த புகைப்படங்கள் டாப்ஸியின் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது.

டாப்ஸியின் சகோதரி ஷாகுன் பன்னு மற்றும் அவரது உறவினர் எவானியா பன்னு ஆகியோரைக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பவல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். 

அபிலாஷ் தப்லியால் மற்றும் பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி ஆகியோரும் திருமணவிழாவில் ஒரு பகுதியாக இருந்தனர். "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், நாங்கள் எங்கிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியாது!" என்று அவர் எழுதினார். கருத்துப் பிரிவில், அபிலாஷ் 'IYKYK' என்று எழுதினார். "வாழ்த்துகள் பயிற்சியாளர்" என்று ஒரு கருத்து இருந்தது. "மத்தியாஸ் கல்யாணம்" என்று ஒருவர் எழுதியிருந்தார்.

டாப்ஸியின் வரவிருக்கும் படம்:

விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் சன்னி கௌஷல் நடிப்பில் வரவிருக்கும் த்ரில்லர் படமான ’பிர் ஆயி ஹசீன் தில்ருபா’ படத்தில் டாப்ஸி நடித்திருக்கிறார். அவரது ரசிகர்கள் வரவிருக்கும் படத்தைப் பார்ப்பார்கள். இதில் ஜிம்மி ஷெர்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Phir Aayi Haseen Dilruba என்பது Haseen Dilruba-ன் தொடர்ச்சியாகும், இது ஜூலை 2021-ல் Netflix இல் திரையிடப்பட்டது. இது பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.மேலும் விக்ராந்த், டாப்ஸி மற்றும் ஹர்ஷ்வர்தன் ரானே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.