யெஸ் சார்… ஓகே சார்.. கமல் சார் கொடுத்த நெருக்கடி.. 20 வருஷமா சிகரெட் குடிக்கவே இல்ல.. ரோலக்ஸ் குறித்து சூர்யா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  யெஸ் சார்… ஓகே சார்.. கமல் சார் கொடுத்த நெருக்கடி.. 20 வருஷமா சிகரெட் குடிக்கவே இல்ல.. ரோலக்ஸ் குறித்து சூர்யா

யெஸ் சார்… ஓகே சார்.. கமல் சார் கொடுத்த நெருக்கடி.. 20 வருஷமா சிகரெட் குடிக்கவே இல்ல.. ரோலக்ஸ் குறித்து சூர்யா

Kalyani Pandiyan S HT Tamil
Oct 29, 2024 09:12 AM IST

நடிகர் சூர்யா விக்ரம் திரைப்படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்த கதையை சிலாகித்து பேசி இருக்கிறார்.

யெஸ் சார்… ஓகே சார்.. கமல் சார் கொடுத்த நெருக்கடி.. 20 வருஷமா சிகரெட் குடிக்கவே இல்ல.. ரோலக்ஸ் குறித்து சூர்யா
யெஸ் சார்… ஓகே சார்.. கமல் சார் கொடுத்த நெருக்கடி.. 20 வருஷமா சிகரெட் குடிக்கவே இல்ல.. ரோலக்ஸ் குறித்து சூர்யா

சூர்யாவை திணிக்க விரும்ப வில்லை

இது குறித்து அவர் பேசும் போது, “ ‘விக்ரம்’ படத்தில் கமல் சார் விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் இருந்தார்கள். நான் படத்தின் கடைசி இரண்டு நிமிடத்தில் தான் வருவேன். அதற்கான படப்பிடிப்பு வெறும் அரை நாள்தான் நடந்தது. அந்தக்கதாபாத்திரத்திற்காக நான் எந்த ஒரு முன் தயாரிப்பையும் செய்யவில்லை.

 

ரோலக்ஸ்
ரோலக்ஸ்

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தேன். லைட் செய்தார்கள். கேமராவை முன் வைத்தார்கள். நான் பேச வேண்டிய வசனங்களை கையில் கொடுத்தார்கள். கடந்த 20 வருடங்களாக என்னுடைய திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. நான் அதை செய்யவே கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பொருத்தவரை, அவன் முழுக்க முழுக்க கெட்டவன்; அப்படிப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் நான் ஏன் நிஜ சூர்யாவை திணிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விதிமுறைகளையும் உடைக்க வேண்டும்

அதன்படி எனக்கான எல்லா விதிமுறைகளையும் உடைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். காட்சிக்கு முன்னால் தான் எனக்கு சிகரெட் கொடுங்கள் என்று கேட்டேன். சிகரெட் வந்தது. அதன் பின்னர் தான் ஷூட்டிங் நடந்தது. ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கிறது. அப்படித்தான் லோகேஷ்க்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. ரோலக்ஸ் உலகம் முழுக்க முழுக்க கெட்டவர்களால் நிறைந்தது. ஆனால், அந்த கெட்டவனை தான் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா
ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா

பொதுவாகவே நான் என்னுடைய பழைய நினைவுகளில் சார்ந்து இருக்கக்கூடியவன். நான் அதில் மூழ்கிக் கிடந்தேன் என்று கூட சொல்லலாம். அது எனக்கு மட்டுமே மிக மிக நெருக்கமான ஒன்று. எப்போதுமே அதை நான் வெளியே காண்பிக்க விருப்பப்பட்டது கிடையாது. உண்மையில், அதைத்தான் நான் சார்ந்து தான் இருக்கிறேன். அதிகப்படியான நேரங்களில் என்னுடைய பழைய நினைவுகளில் இருந்து கிடைக்கக்கூடிய எமோஷனைத்தான் நான் நடிப்பாக வெளிப்படுத்துகிறேன்.

என்னால் கமல் சார் முன்னால் நடிக்க இயலாது.

ஆனால், லோகேஷ் விஷயத்தில் அது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. கமல் சார் வேறு அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர அங்கு 3 மணியளவில் வருவதாக சொல்லி இருந்தார். அதனால் அவர் வருவதற்கு முன்னதாகவே இந்த படப்பிடிப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என்று நான் மிகவும் தீவிரமாக இருந்தேன். காரணம், என்னால் கமல் சார் முன்னால் நடிக்க இயலாது. கூடவே எனக்கு விமானத்தை பிடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் அந்த காட்சிக்கான மூடை முழுக்க முழுக்க செட் செய்தது லோகேஷ் கனகராஜ் தான். ஆம், என்னால் என்னுடைய நினைவுகளில் இருந்து அந்தக்காட்சிக்கான எமோஷனை கொண்டு வரமுடியவில்லை. லோகேஷ்தான் அனைத்தையும் செட் செய்து கொடுத்தார். அதில் ஒரு டயலாக் ஒன்று வரும்.

“இதை உருவாக்க எனக்கு 27 வருஷமானது அதை யாருக்கோ என்னால் கொடுத்துவிட்டு செல்ல முடியாது என்று பேசுவேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரோலக்ஸை என்னுள் முழுமையாக ஏற்றுக்கொண்டு நடித்து விட்டேன். உண்மையில் அவன் இப்படித்தான் இருப்பான் என்பதை நினைத்துதான் நடித்தேன். நானும் லொகேஷூம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனிப்படமாக செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறோம்.” என்று பேசினார்.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.