Suriya44: 2 வருடமாக நடக்கு டிஸ்கஷன்.. ‘சூர்யா 44’ ரகசியத்தை பொத்தி பொத்தி பாதுகாத்தது ஏன்?
இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும், கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்து வருகிறது.

சூர்யா 44
நடிகர் சூர்யாவின் 44 வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது.
“ இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருந்த பதிவில், “ நான் என்னுடைய அடுத்தப்படத்தில், எப்போதும் அழகாக இருக்கும் சூர்யாவுடன் சாருடன் இணைய இருக்கிறேன்” பதிவிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
காரணம், சூரரைப்போற்று திரைப்பட வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆன நடிகர் சூர்யா, அந்தப்படம் கால தாமதம் ஆகும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
