Rajinikanth: இரவு முழுக்க குடியோ குடி.. சலிக்க சலிக்க அரட்டை.. தரையில் சாயும் ரஜினி! - நண்பர் பேட்டி!
ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் ரஜினி குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்
இது குறித்து அவர் பேசும் போது, “ ஒருமுறை படையப்பா படத்தின் படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன்; நண்பன் என்ற ரீதியில் இந்தப்படத்தில் நடிக்கிறாயா? என்று ரஜினி என்னிடம் கேட்டார்.
உடனே நான் எனக்கு அதெல்லாம் தெரியாது என்றே அதற்கு ரஜினிகாந்த், டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய் என்றார். இதனையடுத்து எனக்கு மேக்கப் காஸ்டியூம் உள்ளிட்டவற்றையெல்லாம் போட்டார்கள்.
அந்தக் காட்சியில் ரஜினியை நான் டா போட்டு பேச வேண்டும். இவன் அரசியலுக்கு வா என்றால் வர மாட்டுகிறான்.. என்று டா போட்டு பேசுவது போல காட்சி.. டைரக்டர் சொன்னார் தயவுசெய்து டா போட்டு கூப்பிட வேண்டாம் என்று… காரணம் அவர் பெரிய ஸ்டார் அப்படி கூப்பிடுவது சரியானதாக இருக்காது என்றார்.
உடனே ரஜினி.. இல்லை அவன் டா போட்டு தான் பேச வேண்டும் என்று.. அப்படியே பேசுடா என்றான் நானும் அதே போல ரஜினியை வாடா போடா என்று அதில் பேசினேன்.
அவன் பெரும்பாலும் நன்றாக தான் நடிப்பான். படத்தின் சில இடங்களில் நான் ஓவர் ஆக்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறாய் என்று சொல்வேன்... அவன் நடித்த திரைப்படத்தில் பாட்ஷா திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. என்னுடைய வீட்டிற்கு அவன் மாறு வேஷத்தில் வருவான்.. இருவரும் இரவு நன்றாக குடிப்போம்.., நிறைய பேசுவோம்.. காலையில் செல்வான்
அவனின் படம் வெளியாகும் போது எல்லாம் முதல் காட்சி பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று நான் அவனுக்கு சொல்ல வேண்டும்; அதற்காக அவன் காத்து இருப்பான்.
அவன் என்னை தலைவா என்று தான் கூப்பிடுவான் நானும் அவனை தலைவா என்று தான் அழைப்பேன்... அப்படித்தான் இந்த ஜெயிலர் படம் தொடர்பான என்னுடைய கருத்தைக் கேட்க, வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.
நான் படத்தை பார்த்துவிட்டு படத்தில் தூளாக நடித்திருக்கிறாய்; பாட்ஷாவின் வசூலை விட இது அதிகப்படியான வசூலை குவிக்கும் என்று நான் சொன்னேன். அப்படியே நடந்தது.” என்று பேசினார்.
நன்றி: Rednool
டாபிக்ஸ்