Oh my ghost teaser release: ஹாட்டான ராணியாக சன்னி லியோன்!
சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஆர். யுவன் இயக்கத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் நடித்துள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தின் மூலம் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
பல படங்களில் பாடல்களில் மட்டும் நடித்து ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். கிளாமர் காட்சிகளில் போல்டாக நடித்துப் பல படங்களை வெற்றி பெறச் செய்துள்ளார். தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
இந்த டீசரில் சன்னி லியோன் ஒரு சாம்ராஜ்யத்தின் ராணி போல் காட்சியளிக்கிறார். அதேபோல் கிளாமருக்கும் பஞ்சம் இல்லாமல் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் என்பவர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்