Tamil Remake Movie: ஒரே ஒரு பஸ் மூலம் ஹிட்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் - எந்த பட ரீமேக் தெரியுமா?-sundara travels tamil movie that got hit was the malayalam movie remake of ee parakkum thalika - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Remake Movie: ஒரே ஒரு பஸ் மூலம் ஹிட்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் - எந்த பட ரீமேக் தெரியுமா?

Tamil Remake Movie: ஒரே ஒரு பஸ் மூலம் ஹிட்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் - எந்த பட ரீமேக் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Aug 30, 2024 09:36 AM IST

Tamil Remake Movie: சுந்தரா டிராவல்ஸ். மலையாளத் திரைப்படமான ‘ ஈ பறக்கும் தளிகா ’ என்னும் படத்தில் இருந்து, தமிழில் ரீமேக்காகி ஹிட்டானது.

Tamil Remake Movie: ஒரே ஒரு பஸ் மூலம் ஹிட்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் - எந்த பட ரீமேக் தெரியுமா?
Tamil Remake Movie: ஒரே ஒரு பஸ் மூலம் ஹிட்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் - எந்த பட ரீமேக் தெரியுமா?

இப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. நடிகர்கள் முரளி, ராதா, வடிவேலு மற்றும் ஒரு ஓட்டை சுந்தரா டிராவல்ஸ் என்னும் பஸ் கூட்டணியில் வெளியாகி, நகைச்சுவையில் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. 

சுந்தரா டிராவல்ஸ் படத்தை இயக்குநர் அசோகன் இயக்கி இருந்தார். பரணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டால் டிங் டிங்’ என்னும் பாடல் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது.

கதை 

கோபிகிருஷ்ணா ( முரளி )வும், அழகுவும் ( வலுவேலு ) நண்பர்கள். தந்தையின் மூலம் சாலை விபத்தில் இழப்பீடாக கிடைத்த பேருந்தினை வைத்திருக்கிறார், கோபி. ஆனால் பேருந்தின் தோற்றம் அச்சுறுத்தும் வகையிலும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. அந்த பேருந்தின் பொயர் தான் சுந்தரா டிராவல்ஸ். இதையே படத்தின் பெயராக வைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட பேருந்து ஒரு மினி வீடு போல் செயல்படுகிறது. இந்தப் பேருந்து வீட்டில் கோபிக்கு உற்ற தோழனாக இருப்பவர் அழகு, கீளினராகவும் தான்.

நடமாடும் உணவகம்

இதில் அழகுவின் பாஸ்போர்ட்டை பேருந்தில் இருக்கும் எலி ஒன்று, தின்று அவரது வெளிநாட்டுக் கனவினை சிதைத்துவிடுகிறது. இதனால், அழகு அடிக்கடி அந்த எலியைக் கொல்ல துரத்துகிறார். இந்த காட்சிகள் எல்லாம் திரையில் நகைச்சுவையினை ஏற்படுத்துகின்றன. அதே போல், இந்த பேருந்தினுள், நடமாடும் உணவகத்தை நடத்த கோபியின் நண்பர்கள் உதவுகிறார்கள். அப்போது யார்,பெயர் என்று தெரியாத ஒரு இளம்பெண் ( ராதா ), அந்த வாகனத்தில் தஞ்சம் புகுகிறார். ஆரம்பத்தில் கோபியும், அழகும் அப்பெண்ணை பேருந்தை விட்டு வெளியே துரத்த முயற்சிக்கின்றனர்.

காயத்திரிக்கு திருமண ஏற்பாடு

ஒரு கட்டத்தில் அவரை போலீசார் அழைத்துச் சென்று, அப்பெண்ணின் தந்தையிடம் ஒப்படைக்க முயல்கிறார்கள். அப்போது தான், அப்பெண்ணின் உண்மையான பெயர் காயத்திரி என்றும், தந்தை அரசியலில் சேர வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவருகிறது. 

காயத்திரிக்கு திருமண ஏற்பாடுகள்

அதன் பின், காயத்திரிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது தான், கோபி தான் அப்பெண்ணை காதலித்ததை உணர்கிறார். கோபியும் அழகும் காயத்திரியின் வீட்டில் நுழைகின்றனர். அப்பெண்ணின் தந்தையின் சம்மதத்துடன் காயத்திரியை கரம் பிடிக்கிறார், கோபி. இதனை நகைச்சுவை காட்சிகளை தொகுத்து, எடுத்த படம் தான், சுந்தரா டிராவல்ஸ். காலங்கள் கடந்தாலும், மனிதனை கலக்கிய சுந்தரா டிராவல்ஸை மறக்க முடியுமா. இனும் மக்கள் சுந்தரா டிராவல் படத்தின் இரண்டாம் பகுதி வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.