SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-sun tv singapenne serial today promo on august 21 2024 suyambulingam plan a new strategy for ananthi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 22, 2024 02:38 PM IST

SINGAPENNE SERIAL: இதற்கிடையே, கோயில் திருவிழாவில் தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. அதில் சுயம்புலிங்கம் போட்ட திட்டம் என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. வேலுவை நினைத்துக் கொண்டே தீமிதிக்கும் கட்டையில் எண்ணெயை ஊற்றுகிறாள் ஆனந்தி. - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

இதற்கிடையே, கோயில் திருவிழாவில் தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. அதில் சுயம்புலிங்கம் போட்ட திட்டம் என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. வேலுவை நினைத்துக் கொண்டே தீமிதிக்கும் கட்டையில் எண்ணெயை ஊற்றுகிறாள் ஆனந்தி. அதன் பின்னர் என்ன ஆனது என்பது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய சீரியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப்பெண்ணே சீரியலில், நேற்றைய தினம் ஆனந்திக்கு அவர்களது பெற்றோர் பாத பூஜை செய்தனர் இதை பார்த்து ஆச்சரியப்பட்ட மகேஷ் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டான். இதையடுத்து ஆனந்தியின் அப்பா எப்போது அவள் அம்மனுக்கு காப்பு கட்டி விட்டாளோ அப்போதே அவள் என் மகள் அல்ல அவள் அந்த பச்சையம்மன் மகள்.

அதனால்தான் இப்படி பாத பூஜை செய்கிறோம் என்றார்.இதைடுத்து மகேஷ் அப்படியென்றால் அவளிடம் ஜாலியாக எல்லாம் இனி பேச முடியாதா என்று கேட்க, முடியவே முடியாது என்பது பதிலாக வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய காதலை ஆனந்தியின் அப்பாவிடம் சொல்லும் முடிவை மகேஷ் தள்ளி வைக்கிறான்.

அன்பை பொழிந்த சதிலீலாவதி

இன்னொரு பக்கம் தான்தான் அழகன் என்பதைக் கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்த தயாராக இருந்த அன்பும், அந்த முடிவை தற்சமயமாக கைவிடுகிறான். இதற்கிடையே மகேஷ் மீது திடீரென்று அன்பைப் பொழிந்த சதிலீலாவதி, தான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்பதில் பதற்றம் அடைந்து, உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு எடுத்து அங்கிருந்து கிளம்புகிறேன் என்று கூறுகிறாள்.

அனைவரும் அவரை இன்று ஒரு நாள் மட்டும் இருந்து திருவிழாவை கண்டுகளித்து விட்டு செல்லுமாறு எவ்வளவோ வற்புறுத்துகின்றனர். ஆனால் அவள் தன்னுடைய முடிவில் இறுதிவரை விடாப்பிடியாக தீர்க்கமாக நின்றார். இந்த நிலையில் அவரை எல்லோரும் செல்ல அனுமதித்தனர்.

இதற்கிடையே அழகப்பன் கோயில் நகையை பூசாரி முன்னிலையில் எடுக்க, உடன் இருக்கும் சுயம்புலிங்கம் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் கொஞ்சம் நகையை மட்டும் இப்போது அணியுங்கள். மீதம் இருக்கும் நகையை காலையில் போடலாம் என்று சொல்கிறான். இதையடுத்து நகையை திருடி எப்படி அழகப்பனுக்கும், ஆனந்திக்கும் பிரச்சினையை கொண்டுவரலாம் என்று யோசிக்கிறான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.