Sujatha Vijayakumar: ‘ரவிதான் எங்க வீட்ல முதல்ல கால் வச்ச ஆம்பள.. பேரன்தான் வேணும்னு தவம் இருந்தேன்’- ரவி மாமியார்!
Sujatha Vijayakumar: ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்களுக்குள்ளேயேயும் நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்த மாதிரியான தருணங்களில், நான் ஒவ்வொரு முறையும் ரவிக்கு ஆதரவாகவே நிற்பேன். அங்கு தான் பிரச்சினையை ஏற்படும். - ரவிமாமியார்!

ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிவதாக அண்மையில் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஆர்த்தி ரவி இது என்னுடைய ஒப்புதல் இல்லாமல் ரவி எடுத்த தன்னிச்சையான முடிவு என்று, இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் பிரிவிற்கு ஜெயம் ரவி மாமியாரான சுஜாதா விஜயகுமார்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னதாக, சுஜாதா பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே இருந்த பிணைப்பு குறித்து பேசி இருக்கிறார்
ஆர்த்தி டென்ஷன் பார்ட்டி
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலிக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது, நான் உண்மையில் மிகவும் ஷாக் ஆனேன். காரணம், அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம். நாங்கள் வேறு குடும்பம். அப்படி இருக்கும் பொழுது, எப்படி இவர்கள் தங்களை கனெக்ட் செய்து கொண்டார்கள் என்பதில் எனக்கு ஆச்சரியம் இருந்தது. அதன் பின்னர்தான் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து இருக்கிறார்கள் என்பதும், அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனது என்பதும் தெரிய வந்தது.


