“புருஷனை மதிச்சிருந்தா ஜோதிகா இப்படி ஒரு லெட்டர.. யாருக்கு காது குத்துற.. கேவலம்… கேவலம்..” - சுசித்ரா
கங்குவா திரைப்படத்திற்கு ஜோதிகா எழுதிய லெட்டரை குறிப்பிட்டு நடிகையும், பாடகியுமான சுசித்ரா பேசி இருக்கிறார்.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத்திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்கும் வகையில் பேசி இருந்த பார்வையாளர்களை சாடும் வகையில் நடிகை ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையை பலரும் சாடியிருந்தனர். அந்த வரிசையில் நடிகையும், பாடகியுமான சுசித்ரா ஜோதிகாவை சாடி பிஹைண்ட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
பிச்சை கேட்பது போல இருக்கிறது.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “என்னுடைய வாழ்க்கையில் நான் படித்ததிலேயே மிகவும் கேவலமான லெட்டர் என்றால், அது ஜோதிகா எழுதிய அந்த லெட்டர் தான். ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டது. அது மக்களுக்கு பிடிக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது, படத்தில் இந்தெந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது; ஆகையால் படத்தை சென்று பாருங்கள் என்று சொல்வது என்பது பிச்சைக்கேட்பது போல இருக்கிறது.
உண்மையில் ஜோதிகா சூர்யாவிற்காக அந்த லெட்டரை எழுதவில்லை. இந்த படம் ஹிட்டானால்தான் சூர்யாவை பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடிக்க வைக்க முடியும்; அதற்காகத்தான் இப்படியான ஒரு ஏற்பாடு. இந்த விஷயத்தில் எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. சூர்யா பாலிவுட்டில் களமிறங்குவது தற்போது அவ்ளோ முக்கியமா என்ன..? அல்லது சூர்யாவின் திறமை பாலிவுட்டில் யாருக்கும் தெரியாதா என்ன..? அவருடைய திறமை எப்படியானது என்று இந்த திரைத்துறையில் இருக்கும் எல்லோருக்குமே தெரியும். அவரது கெரியரில் கங்குவார் திரைப்படம் தோல்வியை சந்தித்து இருப்பது இயல்பான விஷயம்.
சென்னையில் இருந்த பொழுது சூர்யாவுடன் அவரது அப்பா இருந்தார். சூர்யாவின் குடும்பம் இருந்தது. அங்கு ஜோதிகா வாயை திறக்கவே முடியவில்லை. ஆனால் மும்பையில் அத்துக்கொண்டு விளையாடுகிறார். கடந்த சில வருடங்களில் அவருக்கு என்ன வேண்டுமோ அதை சுதந்திரமாக செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் புருஷனை மதிக்கக்கூடிய பொண்டாட்டி இப்படிப்பட்ட லெட்டரை நிச்சயமாக எழுத மாட்டாள்.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்