Thozha movie: வம்சியின் வாழ்கைப் பாடம்.. கட்டியணைத்த தோழா! 7 ஆண்டுகள் நிறைவு
பணக்காரர்களாக இருப்பவர்களுக்கும் இயலாமை, ஏக்கம், காதல் தோல்வி உள்ளிட்ட வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை திரை மொழியில் பாடம் எடுத்த வம்சி

நடிகர் கார்த்தியின் கேரியரில் முக்கியமாக சில படங்களில் தோழா திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் இதன் பெயர் ஒப்பிரி. பிரெஞ்சு திரைப்படமான தி இன்டச்சபில்ஸ் என்றதன் மீள்வுருவாக்கமே தோழா. இத்திரைப்படத்தில் கார்த்திக், நாகார்ஜூனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், விவேக், அனுஷ்கா, ஜெயசுதா, ஸ்ரேயா போன்ற நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார், பிரசாத் வி பொட்லூரி தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் 2016ம் ஆண்டு கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானது.
கார்த்திக்கு எப்படி இது முக்கிய படமோ அதேபோல் வாரிசு திரைப்படத்தை இயக்கிய வம்சியின் கேரியரிலும் இந்த தோழா படத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.
குறிப்பாக நடிகர் கார்த்தியை (சீனு) பொறுத்தவரை குடும்பத்தின் மீது பாசமாக இருக்கும் அதே நேரத்தில் தன் வயதிற்கே உரிய அனைத்து சேட்டைகளையும் திரையில் காட்டி இருப்பார்.