Kumudham: ஆட்டம் போட வைத்த மாமா மாமா பாடல்..சூப்பர் ஹிட் கிளாசிக் பாடல்களுடன் தேசிய விருது வென்ற சிறந்த காதல் காவியம்
கல்லீலே கலைவண்ணம், ஆட்டம் போட வைத்த மாமா மாமா போன்ற சூப்பர் ஹிட் கிளாசிக் பாடல்களுடன், அனைத்து தரிப்பினரையும் ரசிக்க வைத்த சிறந்த காதல் காவியமாக குமுதம் திரைப்படம் இருந்து வருகிறது.
தமிழில் வெளியான சிறந்த காதல் காவியங்களில் ஒன்றாக இருந்து வரும் படம் குமுதம். கே.எஸ். கோபால கிருஷ்ணன் திரைக்கதை எழுத, அதிருதி சுப்பா ராவ் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன், செளகார் ஜானகி, விஜயகுமாரி, எம்.ஆர். ராதா, பி.எஸ். சரோஜா, எஸ்.வி. ரங்காராவ் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
காதல், பேமிலி செண்டிமென்ட், த்ரில்லர் என அனைத்து எமோஷன்களும் கலந்த விதமாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர். சுந்தரம் படத்தை தயாரித்திருப்பார்.
காதல், திருமணம், கொலை
ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருக்கும் எஸ்.எஸ். ராஜேந்திரன் சென்னையில் வழக்கறிஞராக இருக்கும் எஸ்.வி. ரங்காராவ் வீட்டில் வாடகைக்கு தங்கி கல்லூரி படிப்பை படித்து வருகிறார். ரங்காராவ் மகள் விஜயகுமாரி, எஸ்.எஸ். ராஜேந்திரன் ஆகியோருக்கு காதல் மலர்கிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் நேரத்தில் குடும்ப சூழ்நிலையால் பார்வையற்றவராக இருக்கும் செளகார் ஜானகியை எஸ்.எஸ். ராஜேந்திரன் திருமணம் செய்கிறார். செளகார் ஜானகி அண்ணனான எம்.ஆர். ராதா, எஸ்.எஸ். ராஜேந்திரன் அண்ணன் மகள் பி.எஸ். சரோஜாவை மணக்கிறார்.
ஒரு கட்டத்தில் எம்.ஆர். ராதா முன்னாள் காதலி அவரை சந்தித்து தன்னை காதலித்து குறித்து வெளிப்படுத்துவதாக மிரட்ட, அவரை கொலை செய்கிறார். அண்ணன் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு கொலை பழியை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்கிறார் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
இந்த நேரத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் காதலியாக இருந்த விஜயகுமார் அவரை காப்பாற்றி, எம்.ஆர். ராதாவுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
சாந்தமான நடிப்பை வெளிப்படுத்திய எஸ்.எஸ். ராஜேந்திரன்
படத்தில் மிகவும் பாசிடிவான கேரக்டரில் வரும் எஸ்.எஸ். ராஜேந்திரன் சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருப்பார். தனது தெளிவான தமிழ் உச்சரிப்பில் தமிழ் பேசி ரசிக்க வைத்திருப்பார்.
படத்தில் கதையை சுமந்து செல்லும் விதமாக விஜயகுமாரி, செளகார் ஜானகி ஆகியோரின் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். முதல் பாதியில் விஜயகுமாரி தனது அழகான புன்னகையாலும், கண்களாலும் எஸ்.எஸ். ராஜேந்திரன் உருகி காதலிப்பதும், பிற்பாதியில் அவரை கொலை வழக்கில் இருந்த காப்பாற்ற ஆக்ரோஷ பெண்மணியாக உருவெடுப்பதும் என நடிப்பில் பரிமாணங்கள் காட்டியிருப்பார்.
குமுதமாக கலங்கடித்த செளகார் ஜானகி
பார்வயற்றவராக வரும் செளகார் ஜானகி பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தையும், கொலை வழக்கில் இருந்து கணவன் காப்பாற்றும் பரிதவிப்பையும் வெளிப்படுத்து கதாபாத்திரத்தில் தோன்றி கலங்கடித்திருப்பார்.
எம்.ஆர். ராதா வழக்கம்போல் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி, இறுதியில் உண்மை காதலால் மனம் திருந்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கே.வி. மகாதேவன் இசையில் சிறந்த கிளாசிக் பாடல்கள்
கண்ணதாசன், மருதகாசி பாடல் வரிகள் எழுத சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கல்லிலே கலை வண்ணம் கண்டான், டி.எம்.எஸ் மற்றும் ஜமுனா ராணி பாடிய மாமா மாமா, சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சுசிலா பாடிய என்னை விட்டு ஓடி போக முடியுமா, எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய மியாவ் மியாவ் புனைக்குட்டி, பி. சுசிலா பாடில் கல்யாணம் ஆனவரே செளக்கியமா போன்ற பாடல்கள் அந்த காலகட்டத்தி மட்டுமல்ல இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சிறந்த கிளாசிக் பாடலாக அமைந்துள்ளன.
காதலை மையப்படுத்தி உணர்வுபூர்மான கதைகளத்தில் வெளியான குமுதம் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து 100 நாள்களுக்கு மேல் ஓடியது. 9வது தேசிய விருதில் மூன்றாவது இடத்தை பிடித்தது. கிளாசிக் படங்கள் பார்க்க விரும்புவோருக்கு சிறந்த கதை, திரைக்கதையுடன் ரசிக்கும் விதமாக இருக்கும் குமுதம் படம் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்