Srividya: ‘3 முறை கருக்கலைப்பு.. கை நிறைய தூக்க மாத்திரைகள்.. டார்ச்சரோ டார்ச்சர்..ஸ்ரீவித்யா சிதைந்த கதை!
ஸ்ரீவித்யாவின் அம்மா அவளை பார்க்கச் சென்றார். ஜார்ஜ் அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி சென்று விட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் அங்கிருந்து வெளியே தப்பித்து ஓடி வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

கமல் வாணி கணபதியுடன் காதலில் இருக்கிறார் என்று தெரிந்த உடன் மனம் நொந்த ஸ்ரீவித்யா, அப்போது படமொன்றில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜார்ஜை காதலித்து அவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்தார். இது குறித்து ஸ்ரீவித்யா அண்ணி விஜயலட்சுமி கலாட்டா பிங்க் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ஸ்ரீவித்யா ஜார்ஜை திருமணம் செய்யும்பொழுது எங்கள் வீட்டிலிருந்து எங்களது மாமியாரை தவிர வேறு யாரும் செல்ல இல்லை. அவரும் கல்யாணத்தில் கடைசி சீட்டில் அமர்ந்து, கல்யாணம் நடப்பதை பார்த்து அழுது கொண்டு திரும்பி விட்டார்.
கல்யாணத்திற்கு பின்னர்தான் ஜார்ஜின் உண்மையான முகம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிந்தது. ஸ்ரீவித்யாவிற்கு சிகை அலங்காரம் செய்யும் லீலாமா ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் எங்களிடம் ஸ்ரீவித்யாவை இப்படி விட்டு விட்டீர்களே?.. நீங்கள் இப்படியே விட்டால் அவள் சீக்கிரமே தற்கொலை செய்து கொள்வாள் என்று சொன்னார்.
