Kamal Hassan: தீவிரமான காதலை உதறிய கமல்.. கண் முன் பறிப்போன உயிர்
கமல் ஹாசன் கண் முன் ஸ்ரீவித்யா உயிர் பிரிந்தது குறித்து செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி அளித்தார்.
நடிகை ஸ்ரீவித்யா, கமல் ஹாசன் கடைசியாக சந்தித்தது குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், “ஸ்ரீவித்யா கமல் ஹாசனை நேசித்தார். இருவரைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோது அதற்கு எதிராக ஸ்ரீவித்யா பேசவில்லை.
கமலுடன் பல படங்களில் நடித்த பிறகு ஸ்ரீவித்யா காதலில் விழுந்தார். அது ஒரு பக்க காதல். ஆனால் கமலுக்கு சினிமாதான் பிரதானம் என்று அடிக்கடி ஸ்ரீவித்யாவிடம் கூறியிருக்கிறார்.
கணவர் ஜார்ஜுடனான திருமணம் முறிந்த பிறகு, கடனில் இருந்த ஸ்ரீவித்யாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.புற்றுநோய் வந்தபோது சென்னையை விட்டு கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
ஸ்ரீவித்யா வசிக்கும் இடம் யாருக்கும் தெரியாது. அவர்களும் யாரையும் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. அவர் மரணத்தை நெருங்கிய போது தான் கமல் ஹாசனை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
ஸ்ரீவித்யாவின் விருப்பத்தை அறிந்து அவரைப் பார்க்க ஓடினார் கமல். கமல் ஹாசனை தவிர வேறு யாரும் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீவித்யாவை சந்திக்க வந்த கமல் ஹாசன், அவரது தோற்றத்தைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில் உடல் நலக்குறைவால், ஸ்ரீவித்யா தனது தலைமுடி அனைத்தையும் இழந்து, உடல் முழுவதும் மெலிந்து மோசமான நிலையில் இருந்தார். கமல் ஹாசனை பார்த்த உடனேயே ஸ்ரீவித்யா இறந்து விட்டார். கமல் ஹாசன் பொதுவாக மரணத்தைக் கேட்டால் அழமாட்டார். ஆனால் ஸ்ரீவித்யா மரணத்தில் அழுதார். அவர் இறந்த செய்தி கேட்டு மூன்று முறை மட்டுமே அழுதார்.
அதில் ஒன்று அவரது அம்மாவுக்கும், மற்றொன்று அவரது சகோதரிக்கும், மூன்றாவது ஸ்ரீவித்யாவுக்கும் அழுது இருக்கிறார். மரணத்தை நெருங்கியபோது, ஸ்ரீவித்யா பேசிய ஒரே பெயர் தன்னுடையது என்று கூறி அழுதார் “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்