தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Special Article Related To The Movie Enna Petha Rasa Completing 35 Years

35 Years of Enna Petha Rasa: திருமண தேதியில் கைதாகும் மணமகன்.. அதன் பின்னணி கதை.. பாடல்கள் ஹிட்!

Marimuthu M HT Tamil
Jan 27, 2024 08:16 AM IST

என்னெப் பெத்த ராசா திரைப்படம் வெளியாகி 35ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

என்னெப் பெத்த ராசா திரைப்படம்
என்னெப் பெத்த ராசா திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

என்னெப் பெத்த ராசா திரைப்படத்தின் கதை என்ன?ஒரு கிராமத்தில் வசிக்கும் ராஜா குடும்பத்திற்கும் அவரது தாய் மாமன் குடும்பத்திற்கும் பகை இருக்கிறது. ராஜா, தனது தாய்மாமன் மகள் லட்சுமியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். லட்சுமியிடம் புரியவைக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர். பின் இருகுடும்பங்களும் சேர்கின்றன. திருமணம் நடக்க நிச்சயத்த தேதியில் ராஜா ஒரு அவ்வூருக்கு வந்த நாடகக்காரி ஒருவரைக் கொன்ற வழக்கில் கைதாகிறார். மகளின் வாழ்க்கைப் பாழான விரக்தியில் தாய்மாமன் இறக்கிறார். இறுதியில் யார் அந்த நாடகக்காரியைக் கொன்றது?. நாடகக்காரியைக் கொன்று பழியைப் போடும் அளவுக்கு இருந்த பகை என்ன? அதில் இருந்து ராஜா எப்படி மீள்கிறார் என்பதை ஜனரஞ்சகமாக சொன்ன படம் தான், ‘என்னெப் பெத்த ராசா’.

இப்படத்தில் ராஜாவாக ராமராஜனும், லட்சுமியாக ரூபினியும் நடித்துள்ளனர். ராஜாவின் தாய்மாமனாக வினுச்சக்கரவர்த்தியும், ராஜாவின் தாய் - தந்தையாக ஸ்ரீவித்யாவும் கவுண்டமணியும் நடித்திருக்கின்றனர். நாடகக்காரியாக சாதனா நடித்திருந்தார். 

தவிர திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஜி. சீனிவாசனும் அவரது பணியாட்களாக பயில்வான் ரங்கநாதனும் நடித்துள்ளனர். ராஜ்கிரண், ஜானி என்னும் சிறுகதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இளையராஜாவின் இசையில்  சொந்தம் ஒன்றைத்தேடும் செல்லக்கிளி, ஆசை வச்ச பேரயெல்லாம், மல்லிகைப்பூ காதிலே, எல்லோர்க்கும் நல்லவனா, ஆம்பளை லட்சணமா, பெத்த மனசு ஆகியப் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. 

இப்படம் ஒரு கிராமத்தில் நடிக்கும் கதையென்பதால் வெளியான காலத்தில் பி மற்றும் சி சென்டர்களில் சக்கைப் போடு போட்டு, 100 நாட்களைக் கடந்து திரையில் ஓடி தயாரிப்பாளர் ராஜ்கிரணுக்கு லாபத்தை ஈட்டித்தந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.