En Purushan Kuzhanthai Mathiri: இருதாரக் கதை.. வடிவேலுவின் காமெடியில் ஹிட்டடித்த என் புருஷன் குழந்தை மாதிரி!
En Purushan kuzhanthai Mathiri: என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
En Purushan kuzhanthai Mathiri: என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படம் 2001ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு,பொன்னம்பலம், முத்துகாளை ஆகியோர் நடித்த காமெடி திரைப்படம் ஆகும். இப்படத்தை விஜயை வைத்து சுறா படத்தை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியிருப்பார். இப்படத்துக்குண்டான இசையை தேவா செய்துள்ளார்.
படத்தின் கதை என்ன?:ஒரு கிராமத்தில் வசிக்கும் படிப்பறிவற்ற பணக்காரர் முருகேசன். நல்லவர். தனது உறவுக்காரப்பெண் மகேஸ்வரியை காதலித்து வருகிறார். மகேஸ்வரி எப்போதும் முருகேசன் தைரியமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். இதற்கிடையே முருகேசனின் எதிரியாக, அவரது பங்காளி சாந்தமூர்த்தி திகழ்கிறார்.
ஒரு நாள் கிராமத்தில் நடனமாட வரும் மங்கை சிந்தாமணியை, அவரது வளர்ப்புத்தாய் பெருமுதலாளிகளுக்கு மத்தியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்த ஏலம் விடுகிறார். அப்போது சாந்தமூர்த்தி சிந்தாமணியைக் கைப்பற்றி தனது காம இச்சையை பூர்த்தி செய்ய நினைக்கிறார். அப்போது வரும் முருகேசன், சிந்தாமணியை விலைக்கு வாங்கி, அவளும் ஒரு தான் என்பதை உணர்ந்து, அவளது பண்ணை வீட்டில் தங்கவைத்து பாதுகாப்புக் கொடுக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, முருகேசனின் திருமணத்திற்கு முந்தைய நாள் போதையில் இருக்கும்போது, சாந்தமூர்த்தி முருகேசனை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது பண்ணைவீட்டில் ஆயுதங்களை எடுக்கவரும் முருகேசனுக்கும் சிந்தாமணிக்கும் இடையே உடலுறவு ஏற்பட்டு விடுகிறது. இந்த குற்றவுணர்ச்சியில் திருமணத்தை ரத்து செய்ய விரும்புகிறார். நெருங்கிய உறவினர் அதை வேறுவிதமாக சொல்லி புரியவைக்கிறார்.
மகேஸ்வரியும் சிந்தாமணியும் ஒரே நேரத்தில் தாய் ஆகி, இரு ஆண் குழந்தைகளைப் பெற்று எடுக்கின்றனர். இதற்கிடையே மகேஸ்வரியின் குழந்தையை கொல்ல முயற்சிக்கும் சாந்தமூர்த்தியிடம் இருந்து, குழந்தையைக் காப்பாற்றிவிட்டு, தவறுதலாக மலையில் இருந்து இறந்துவிடுகிறார், சிந்தாமணி.
அப்போது சிந்தாமணியின் உண்மையான பாசத்தையும் அன்பையும் உணர்வதோடு, நடந்ததை எல்லாம் அறிகிறார், மகேஸ்வரி. அதன்பின், இரு குழந்தைகளையும் வளர்க்கிறார், மகேஸ்வரி.
நடித்தவர்கள் விவரம்: இப்படத்தில் முருகேசனாக லிவிங்ஸ்டனும், அவரது நண்பர் அங்குசாமியாக வடிவேலுவும் நடித்து இருந்தனர். மகேஸ்வரியாக நடிகை தேவயானியும், நடனக்காரி சிந்தாமணியாக விந்தியாவும் நடித்துள்ளனர். மகேஸ்வரியின் தந்தையாக இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும், சாந்தமூர்த்தியாக பொன்னம்பலமும் நடித்துள்ளனர். தவிர, பழனிசாமி கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தி நடித்திருப்பார். அதேபோல், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் நடிகர்களான மயில்சாமி, முத்துகாளை ஆகியோர் நடித்து இருந்தனர்.
காமெடி: இப்படத்தில் வடிவேலுவின் காதை தொட முத்துக்காளை துரத்தும் காமெடி, பணம்கட்டி சீட்டு விளையாடி ஜெயித்தவரை ஐடியா சொல்வதுபோல் சொல்லி அவரை தோற்கடிக்க வைக்கும் வடிவேலுவின் காமெடி, அதேபடத்தில் இன்னொரு காமெடியில் வடிவேலுவை அடித்து காதைக் கடித்து துப்புவார் முத்துகாளை, திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து செத்து செத்து விளையாடுவோமா என நடிகர் வடிவேலுவிடம் முத்துகாளை வம்பிழுக்கும் காட்சிகள், விந்தியாவை விலைக்கு வாங்கும் காட்சியில் வடிவேலுவின் காமெடிகள் என எக்கச்சக்க காமெடிக்காட்சிகள் இன்றும் இப்படத்தில் பலரால் ரசிக்கப்படுகிறது.
இசை: படத்திற்கான இசையை தேவா வழங்கியிருந்தார். இதில் ஆடிய ஆட்டம் என்ன பண்ணிய சேட்டை என்ன, பட்டாம்பூச்சி புடவை கட்டி பொட்டாபோட்டா ரவிக்கைபோட்டு நடந்துவர சின்னக்குட்டிடோய், வாழவைக்கும் சனங்களுக்கு வணக்கம்சொல்லி யெம்மா யெம்மா, சித்திரையே சித்திரையே என் நித்திரை போயிருச்சே, நாலடி ஆறு அங்குலம் என் அக்கா மகபேரு மங்கலம் ஆகியப் பாடல்கள் பி மற்றும் சி செண்டரில் ஹிட்டடித்தன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்