37 Years of Rettai Vaal Kuruvi: 2 இல்லறத்துணைகளை சமாளிக்கும் கணவனின் கதை.. ராஜராஜசோழன் நான் பாடல் தந்த அட்டேன்ஷன்!
ரெட்டை வால் குருவி திரைப்படம் வெளியாகி 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
1987ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பாலுமகேந்திரா எழுதி, இயக்கி,படம்பிடித்து வெளியான திரைப்படம், ரெட்டை வால் குருவி. இப்படத்தில் மோகன், ராதிகா மற்றும் அர்ச்சனா ஆகிய மூவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இசையை இளையராஜா செய்திருந்தார்.
ரெட்டை வால் குருவி படத்தின் கதை என்ன?: கோபி நேஷனல் டிவி ஸ்டேஷனில் செய்தியாளராகப் பணிபுரிகிறார். அங்கு உயர் பதவியில் இருக்கும் மார்க்கபந்துவிடம் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் பழகி வருகிறார், கோபி. கோபிக்கு முன்பே, தனது அத்தை மகள் துளசியுடன் திருமணம் ஆகியிருந்தது. ஆனால், அதையெல்லாம் மறந்து ராதா என்னும் புகழ்பெற்ற பாடகியிடம் காதலில் விழுகிறார், கோபி. பின் அவரை ரகசியமாக மணமுடித்துக்கொள்கிறார். ஒரே நேரத்தில் துளசி மற்றும் ராதாவுடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடுகிறார், கோபி. ஆனால், இதை ஒரு மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு மனைவியிடம் ரகசியம் பாதுகாக்கிறார். இருவரும் ஒன்றுசேர்ந்தார்போல ஒரே தருணத்தில் கர்ப்பிணி ஆகுகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் பிரசவத்திற்காக துளசியும் ராதாவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கோபி பல நாட்களாக கட்டிகாப்பாத்தி வந்த ரகசியம் உடைகிறது. இறுதியில் கோபி, தனது மனைவிகளான துளசி மற்றும் ராதாவுடனும் தனது இரண்டு குழந்தைகளுடனும் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லி முடித்த படம் தான், ரெட்டை வால் குருவி.
இப்படத்தில் கோபியாக மோகனும், துளசியாக அர்ச்சனாவும், ராதாவாக ராதிகாவும் நடித்துள்ளனர். மார்க்கபந்துவாக வி.கே.ராமசாமியும், டி.எஸ். வாசனாக தேங்காய் சீனிவாசனும் நடித்துள்ளனர்.
இசையின் பங்களிப்பு: இப்படத்தின் வெற்றிக்கு இசை ஒரு முக்கிய காரணம் எனலாம். இப்படத்தின் இசையை இளையராஜா செய்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற கவிஞர் மு.மேத்தா எழுதிய ராஜராஜசோழன் நான் என்னும் பாடல், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. இப்பாடல் கீரவாணி என்னும் ராகத்தில் இதை செய்திருந்தார். அதேபோல், கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் என்னும் பாடல், கர்நாடக ராகமான ‘நாதபைரவி’யை அடிப்படையாகக் கொண்டு எடுத்துள்ளார். மேலும், இப்படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தெலுங்கில் பாடல்கள் அனைத்தையும் ராஜஸ்ரீ எழுதியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்