HBD Satyajit Ray: இந்திய சினிமாவின் உலகளாவிய அடையாளமாய் விளங்கும் இயக்குநர் சத்யஜித் ரே பிறந்தநாள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Satyajit Ray: இந்திய சினிமாவின் உலகளாவிய அடையாளமாய் விளங்கும் இயக்குநர் சத்யஜித் ரே பிறந்தநாள்!

HBD Satyajit Ray: இந்திய சினிமாவின் உலகளாவிய அடையாளமாய் விளங்கும் இயக்குநர் சத்யஜித் ரே பிறந்தநாள்!

Marimuthu M HT Tamil
May 02, 2024 08:05 AM IST

HBD Satyajit Ray:இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் சத்யஜித் ரே பிறந்த நாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை!

இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் சத்யஜித் ரே
இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் சத்யஜித் ரே

36 தேசிய விருதுகள், இத்தாலி நாட்டின் உயரிய தங்க சிங்கம் விருது, ஜெர்மனியின் புகழ்பெற்ற தங்க கரடி விருது மற்றும் இரண்டு வெள்ளி கரடிகள் விருது, ஆஸ்கர் கவுரவ விருது உட்பட பல்வேறு விருதுகளை தன் வாழ்நாளில் பெற்றுள்ளார். அவரைப் பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன.

யார் இந்த சத்யஜித் ரே?:

சத்யஜித் ரேவின் குடும்பத்தினர் ரே என்னும் அடைமொழியோடு அடையாளம் காணப்பட்டனர். அடிப்படையில் இவரது குடும்பம், வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு விஷ்ணுவை வணங்கும் வழங்கும் பழக்கமுடையது.
மேற்கு வங்காளத்தின் கிஷோர்கஞ்சினைப் பூர்வீகமாகக் கொண்ட சிறார் எழுத்தாளர் சுகுமார் ரேவுக்கும் சுப்ரபா ரேவுக்கும் தற்போதைய கொல்கத்தாவில் மே 2ஆம் தேதி மகனாகப் பிறந்தார், சத்யஜித் ரே. இவரது தந்தை சத்யஜித் ரேவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே மறைந்தார். பின் தன் தாத்தா உபேந்திரகிஷோர் ரே நடத்திய சிறார் பத்திரிகை ஆன ‘சந்தேஷ்’பத்திரிகையில் தனது படைப்புகளை வெளியிட ஆர்வம் காட்டினார்.

பின் சத்யஜித் ரே, கொல்கத்தாவின் பாலிகங்கே அரசு உயர்நிலைப் பள்ளியிலும், அதன்பின் மேற்படிப்பினை பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ.பட்டமும் படித்துப்பெற்றார்.

அதன்பின், கவிஞர் ரபீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட சாந்திநிகேதன் கல்லூரியில், ஓவியம் வரைவதற்கான ஃபைன் ஆர்ட்ஸ் கலை படிக்க தாயினால் வற்புறுத்தப்பட்டு படித்தார். பின் 1943ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அட்வர்டைஸிங் ஏஜென்ஸி ஒன்றில் பணிக்கு சேர்ந்து, விசுவல் டிசைனை நன்கு கற்றுக்கொண்டு, நிறையப் புத்தகங்களை வடிவமைத்தார். சிறுவயது முதலே நிறைய உலக சினிமாக்களைப் பார்க்கும் பழக்கம் கொண்ட சத்யஜித் ரே, 1947ஆம் ஆண்டு கல்கத்தா ஃபிலிம் சொசைட்டியை தொடங்கி, நிறைய அயல்நாட்டுப் படங்களை திரையிட்டார். அதனைப் பார்த்து படிக்கவும் செய்தார். 1949ஆம் ஆண்டு, பிஜோய தாஸ் என்னும் தன் நீண்டநாள் காதலியை மணந்தார்.

திரைப்பிரவேசம்:1928ஆம் ஆண்டில் வங்காள மொழியில் வெளிவந்த ’பில்டுங்ரோமன்’ என்னும் கிளாஸிக்கான கதையை அடிப்படையாக வைத்து ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தை எடுக்கமிட்டார், சத்யஜித் ரே. இப்படத்துக்காக, ஸ்டோரி போர்டு வரைதலை முதலில் துவங்கினார். இப்படம் அபு என்னும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையாகும்.

அதன்பின், 1956ஆம் ஆண்டு, அபரஜிதோ, பரஷ் பாதர்(தத்துவ ஞானியின் கல்), ஜல்சாகர்(இசை அறை), அபூர் சன்சார்(அரபுவின் உலகம்), தேவி, தீன் கன்யா(மூன்று பெண்கள்), கஞ்சன்ஜங்கா, நாயக், அபிஜன்(பயணம்), மகாநகர், சாருலதா, ஷத்ரஞ் கே கிலாரி(செஸ் வீரர்கள்), ஜோய் பாபா(யானை கடவுள்), சத்கதி(விடுதலை), ஷாகா ப்ரோஷாகா(மரத்தின் கிளைகள்), அகண்டுக்(அந்நியர்) ஆகிய 29 திரைப்படங்கள், ஐந்து ஆவணப்படங்கள் மற்றும் 2 குறும்படங்களை எழுதி இயக்கினார்.

இவர் இயக்கிய அஷானி சங்கேத், இந்தியாவின் வறுமையை வெளியுலகுக்கு சொன்னதாக விமர்சிக்கப்பட்டது. சத்யஜித் ரே இயக்கிய ‘அபு ட்ரயாலஜி’,2005ஆம் ஆண்டு, டைம்ஸ் பத்திரிகையின், ‘ஆல் - டைம்’ 100 திரைப்படங்களில் இடம்பெற்றது. சத்யஜித் ரே, திரை இயக்கத்தைத் தவிர, சிறுகதைகள் மற்றும் நாவல் எழுதுவார். ஓவியர், பிறரின் படங்களுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்துள்ளார். இசை அமைக்கவும் செய்தார்.

64ஆவது ஆஸ்கர் விருதுகளானது 1992ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது சத்யஜித் ரேவின் பணிகளுக்காக கவுரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.1984ஆம் ஆம் ஆண்டு ரே, தாதாசாகேப் பால்கே விருதுபெற்றார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.