HBD Lata Mangeshkar: ‘குடும்பத்திற்காக குரலை முதலீடு செய்த குயில்’ வலையோசையின் குரலோசை லதா மங்கேஷ்கர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Lata Mangeshkar: ‘குடும்பத்திற்காக குரலை முதலீடு செய்த குயில்’ வலையோசையின் குரலோசை லதா மங்கேஷ்கர்!

HBD Lata Mangeshkar: ‘குடும்பத்திற்காக குரலை முதலீடு செய்த குயில்’ வலையோசையின் குரலோசை லதா மங்கேஷ்கர்!

Marimuthu M HT Tamil
Sep 28, 2023 08:56 AM IST

மறைந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

லதா மங்கேஷ்கரின் குரலில் ஒலித்த ரீங்காரம்
லதா மங்கேஷ்கரின் குரலில் ஒலித்த ரீங்காரம்

யார் இந்த லதா மங்கேஷ்கர்: பாடகி லஷா மங்கேஷ்கர், செப்டம்பர் 28ஆம் தேதி, 1929ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தவர். பிறப்பிலேயே ஒரு இசைப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தார். இவரது தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர். இவர் மாராத்திய மொழியைத்தாய் மொழியாகக்கொண்டு பாடும் இசைக்கலைஞர். லதாவின் அம்மா குஜராத்தி மொழி பேசுபவர்.

இவரது சகோதரி தான் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே ஆவார். இவரது மற்றொரு சகோதரியான மீனா, உஷா மற்றும் சகோதரர் ஹிருதய்நாத் அனைவரும் நன்கு பாட்டுபாடக்கூடியவர்கள். இவர்கள் அனைவருக்கும் முதல் ஆசிரியர், தந்தை பண்டிட் தீனாந்த் மகேஷ்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது கிடைத்தது சினிமா வாய்ப்பு: 1942-ல் முதன்முதலாக சினிமாவிற்காக, கிகி ஷசால் என்னும் மராத்திப் பாடலைப் பாடினார், லதா. அதைத்தொடர்ந்து அவரது தந்தை மரணிக்கவே, கிடைக்கிற அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி பாடினார், லதா. ஏனெனில், பாடியதன் மூலம் கிடைக்கும் வருமானம் தம்பி, தங்கைகளைப் படிக்க வைக்க உதவியது. குடும்பத்தின் மூத்த மகளாக அவருக்குப் பொறுப்புகள் அதிகம் இருந்தன.

முதன்முதலாக தமிழில் எப்படி பாடினார்: 1952ஆம் ஆண்டு, இந்தியில் வெளியான ஆண் என்னும் திரைப்படத்திற்கு நவ்ஷத் இசையமைத்திருந்தார். பின், அப்படம் ஆண் முரட்டு அடியாள் என்னும் பெயரில், தமிழில் டப்செய்து ரிலீஸானது. அப்போது, டப்பிங் படத்துக்காக முதன்முதலில் தமிழில் படத்தொடங்கினார், லதா மங்கேஷ்கர்.

இளையராஜா தந்த நேரடி வாய்ப்பு: பின் இவரை இளையராஜா தான் தமிழில் நேரடியாகப் பாட்டு பாட அழைத்து வந்தார். அப்படி, இவர் பாடி நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய பாடல்கள் என்றால் வளையோசை கலகலவென, ஆராரோ ஆராரோ.. நீ வேறோ நான் வேறோ.. ஆகியவை ஆகும். ஆம். இளையராஜா இசையில் பிரபு - ராதா நடிப்பில் 1987ஆம் ஆண்டு உருவான படம் ஆனந்த். இப்படத்தில் ஆராரோ ஆராரோ நீ வேறோ.. நான் வேறோ.. என்னும் பாடலை முதன்முதலாக நேரடியாகப் பாடுகிறார். பின், 1988ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படத்தில் வளையோசை கலகலவென என்னும் பாடலைப் பாடி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரபலம் ஆனார், லதா.

வளையோசை கலகல.. பாடகிக்காக உருவான பாடல்: இப்பாடல் உருவாவதற்கு முன்பு, இப்பாடலுக்கு லதா மங்கேஷ்கரை மனதில் ஃபிக்ஸ் செய்துவிட்டார், இளையராஜா. இவர் ஒரு தமிழ் தெரியாத பாடகி என்பதை மனதில் வைத்து, கவிஞர் வாலியிடம் பாடல் எழுதச் சொல்லும்போது, எளிமையான ரீங்காரமிடும் வார்த்தைகளைக் கொண்டு பாட்டினை எழுதித்தரச் சொல்லியிருக்கிறார். அப்படி, லதா மங்கேஷ்கர் எளிமையாகப் பாடவேண்டுமென தமிழ் இலக்கணத்திலுள்ள இரட்டைக்கிளவிகளைப் பயன்படுத்தி, பாடலை எழுதிக்கொடுத்துள்ளார், லதா மங்கேஷ்கர். அப்படி, அதனை கம்போஸ் செய்து, லதா மங்கேஷ்கரை வைத்து ஹிட்டடித்திருக்கிறார், இளையராஜா.

30 ஆண்டுகளைக் கடந்து மனதில் நிற்கும் குரல்: தமிழில் குறைவான பாடல்களைப் பாடி இருந்தாலும் 30 ஆண்டுகளைக் கடந்தும் நமக்கு வளையோசை கலகலவென பாடலை முணுமுணுக்கும்போதெல்லாம், நம் மனத்திரையில் வந்துபோவது, லதா மங்கேஷ்கரின் குரல் தான்.

அத்தகைய ரீங்கார குரலுக்கு இன்று பிறந்தநாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம்கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.