HBD J. P.Chandrababu: தென்னக சார்லி சாப்ளின்.. நகைச்சுவை மன்னன்.. சந்திரபாபு பிறந்த நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd J. P.chandrababu: தென்னக சார்லி சாப்ளின்.. நகைச்சுவை மன்னன்.. சந்திரபாபு பிறந்த நாள் இன்று

HBD J. P.Chandrababu: தென்னக சார்லி சாப்ளின்.. நகைச்சுவை மன்னன்.. சந்திரபாபு பிறந்த நாள் இன்று

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 05, 2023 05:00 AM IST

சந்திரபாபு
சந்திரபாபு

பிறப்பு

தூத்துக்குடியில் 1927 ஆகஸ்ட் 4 ல் சந்திரபாபு ஜோசப் ரோட்ரிக்ஸ் என்பவருக்கும் ரோஸ்லின் என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் பிச்சை. பெற்றோர் பாபு என்று செல்லமாக அழைத்து வந்த நிலையில் சந்திர குலத்தில் பிறந்ததால் சந்திர என்ற பெயரை பாபுவுடன் சேர்த்து தன் பெயரை சந்திரபாபு என்று மாற்றி கொண்டார். இவரது குடும்பம் சுதந்திர போராட்டத்தில் இணைந்ததால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டது. இதனால் கொழும்புவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிப்பை முடித்தார்.

இதையடுத்து அவருடைய குடும்பம் மீண்டும் சென்னைக்கு வந்தது. அப்போது திரைத்துறையில் நுழைய முயற்சித்து முடியாமல் போக தற்கொலைக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் 1947ல் தன அமராவதி என்ற படத்தில் அறிமுகமானார். பின் 1952ல் மூன்று பிள்ளைகள் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்து எஸ்.எஸ்.வாசனின் பாராட்டை பெற்றார்.

1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரானார். இதையடுத்து சபாஷ்மீனா, புதையல், நாடோடி மன்னன், குலேபகாவலி, நீதி, ராஜா, பாதகாணிக்கை, சகோதரி, நாடோடி மன்னன், கவலை இல்லாத மனிதன், அடிமை பெண் போன்ற ஏராளமான படங்களில் நடித்தார்.

அதுமட்டும் இல்லாமல் குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, உனக்காக எல்லாம் உனக்காக, பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே, நானொரு முட்டாளுங்க, பிறக்கும் போது அழுகிறான், சிரிப்பு வருது சிரிப்பு வருது, ஒண்ணுமே புரியல உலகத்தில, பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, என்னை தெரியலையா இன்னும் புரியலையா போன்ற பாடல்கள் பல பாடல்களை பாடி உள்ளார். 50 ஆண்டுகள் கடந்தும் தமிழ் ரசிகர்களின் வாழ்வில் கஷ்டமான நாட்களில் ஆறுதல் தருவதாக உள்ளது என்றால் மிகையல்ல. சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் வைக்கும் ஏராளமான பாடல்களை பாடி நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்திலேயே தமிழ் சினிமா நடிகர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சந்திர பாபுவின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை சிறப்பாக அமையவில்லைதான்.

சந்திரபாபு தன் இறுதிக்காலத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

இன்றும் தமிழ் சினிமாவில் காமெடி என்ற சகாப்தம் குறித்து பேச ஆரம்பித்தால் அவரை கடந்து போகவே முடியாது என்ற வகையில் ஆளுமை செலுத்தும் சந்திரபாபு பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.