Hansika Brother: திருமணம் முடிந்தவுடன் ஹான்சிகா வீட்டில் இப்படியா நடக்கணும்
நடிகை ஹன்சிகாவின் சகோதரர் தனது மனைவியை பிரிவதாக சொல்லப்படுகிறது.
ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இந்த மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணம் முடிந்து நடிகை ஹன்சிகா தனது கணவருடன் இணைந்து மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார். அவ்வபோது தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அத்துடன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதால், ஹனிமூன் இப்போது செல்லப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்.
இவருடைய திருமண நடந்த போது தன்னுடைய தாய் மற்றும் சகோதரருடன் மட்டுமே ஹன்சிகா புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
ஏன் அவருடைய அண்ணி இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளத்திலும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதனால் இவர்கள் விவகாரத்து முடிவுக்கு சென்றுள்ளார்.
நீண்ட நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது விவாகரத்து முடிவை எடுத்து உள்ளனர்.
பிரசாந்த் மோத்வானி, முஸ்கான் நான்சியை 2021 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்இவர்களின் திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை.
மனைவி முஸ்கானுக்கு முகமுடக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய முகஅம்சங்கள் பாதிப்படைந்துள்ளது. அதனால் கணவர் பிரசாந்த் மோத்வானி பிரிவதாக கூறப்படுகிறது. மேலும் முக முடக்கத்தால் தனக்கு ஏற்பட்ட வலிகளை முஸ்கான் நான்சியை உருக்கமாக சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்