Bigg Boss 8: கர்ப்பமாக்கி மனைவியை விட்டு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8வது சீசனுக்கு செல்கிறாரா?-source says actor arnav to join in bigg boss tamil season 8 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 8: கர்ப்பமாக்கி மனைவியை விட்டு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8வது சீசனுக்கு செல்கிறாரா?

Bigg Boss 8: கர்ப்பமாக்கி மனைவியை விட்டு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8வது சீசனுக்கு செல்கிறாரா?

Aarthi Balaji HT Tamil
Sep 15, 2024 10:37 AM IST

Bigg Boss 8: செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அர்னாவ், பிக் பாஸ் 8 ஆவது சீசனின் போட்டியாளராக நுழைய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

Bigg Boss 8: கர்ப்பமாக்கி மனைவியை விட்டு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8வது சீசனுக்கு செல்கிறாரா?
Bigg Boss 8: கர்ப்பமாக்கி மனைவியை விட்டு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8வது சீசனுக்கு செல்கிறாரா?

கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக ஒருபக்கமும், இன்னொரு பக்கம் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அடுத்த சீசன்

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவிருக்கும் சீசனை நடிகர் சரத்குமார் தான் தொகுத்து வழங்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே, சன் டிவியில் ஒளிப்பரப்பான மாஸ்டர் செஃப், நம்ம ஊரு ஹீரோ உள்ளிட்ட நிகழ்ச்ச்களை தொகுத்து வழங்கினார்.

வைரலாகும் பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்?

பிக் பாஸ் 8 வது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்றும், 8 வது சீசனின் போட்டியாளர்கள் யார் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுக்க தொடங்கியுள்ள நிலையில் 8 ஆவது சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் என்று ஒரு லிஸ்ட் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அர்னாவ், பிக் பாஸ் போட்டியாளராக நுழைய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

செல்லம்மா சீரியல் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே திவ்யா ஸ்ரீ என்ற சீரியல் நடிகையை கர்ப்பமாக்கி அவரை கைவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.

கமல் ஹாசன் விலகல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை நடிகர் கமல் ஹாசன் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.