Rajinikanth: ‘தலைவரே லுக் செம’.. வைரலாகும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள்!
ரஜினிகாந்தின் புதிய லுக்கானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
அண்மையில் வெளியான ரஜினியின் திரைப்படங்கள் யாவும் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய வெற்றியை பெறவில்லை. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு போட்டியாக பார்க்கப்படும் கமலின் விக்ரம் திரைப்படமும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனால் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
படப்பிடிப்பு பணிகளில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் முகேஷ் அம்பானியின் ஜியோ மையத்தில் உள்ள நிதா முகேஷ் அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழாவுக்கு சென்றிருக்கிறார்.
2000 பேர் உட்கார்ந்து படம் பார்ப்பதற்கு ஏதுவான திரையரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக 3 இடங்கள், தொழிட்நுட்ப ரீதியாக முன்னேற்றப்பட்ட 250 பேர் அமரக்கூடிய ஸ்டியோ தியேட்டர் உள்ளிட்ட பலவை இந்த கலாச்சார மையத்தில் அடங்கி இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியின் திறப்பு விழாவிற்கு பிரியங்கா சோப்ரா உட்பட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ரஜினிகாந்தும் அவரது மகளும் போட்டோக்களை எடுத்துக்கொண்டனர். தன்னுடன் க்ளீன் சேவ் செய்து இருந்த ரஜினிகாந்தின் போட்டோக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செளந்தர்யா, “ புதிய லுக் செம தலைவரே” என்று பதிவிட்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜெயிலர் படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது தவிர மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
டாபிக்ஸ்