Soundarya Rajinikanth: கைவிட்டு போன முதல் இணை; கழுத்தில் ஏறிய இரண்டாம் தாலி; கண்ணீர் வடித்த ரஜினி- செளந்தர்யா காதல் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Soundarya Rajinikanth: கைவிட்டு போன முதல் இணை; கழுத்தில் ஏறிய இரண்டாம் தாலி; கண்ணீர் வடித்த ரஜினி- செளந்தர்யா காதல் கதை!

Soundarya Rajinikanth: கைவிட்டு போன முதல் இணை; கழுத்தில் ஏறிய இரண்டாம் தாலி; கண்ணீர் வடித்த ரஜினி- செளந்தர்யா காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2023 05:30 AM IST

பிரபல நடிகரான ரஜினியின் இரண்டாவது மகளான செளர்ந்தர்யா தன்னுடைய விவாகரத்து பற்றியும், அடுத்தக்காதல் பற்றியும் மனம் திறந்து பேசியவை இவை!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

எனது அப்பாவிடம்  இவர்கள் குடும்பத்தை பற்றி சொல்லி, நாங்கள் இருவரும் தனியார் ஹோட்டலில் சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த நேரத்தில் என்னுடைய நம்பர் இவரிடமோ, இவருடைய நம்பர் என்னிடமோ கிடையாது. 

இதனால் இவரை நான் தேடிக்கொண்டே அந்த தனியார் ஹோட்டலுக்குச் சென்றேன். போட்டோ மட்டும் பார்த்திருந்ததால் இவரை தேடி கண்டுபிடித்து விட்டேன். எங்கள் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்கும் இருக்கும் ஆன்மிக நாட்டம். 

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கனெக்ட் செய்ய வழி வகுத்ததுஅதுதான். அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசினோம்; தொடர்ந்து பயணித்தோம்; அந்த பயணமானது ஒரு கட்டத்தில் இவர் தான் என்னுடைய கணவர் என்பதை முடிவு செய்ய வைத்தது.

என்னுடைய வீட்டில் நான் இருந்தது போன்ற ஒரு உணர்வை இவரிடம் பெற்றேன். இவரை சந்தித்து விட்டு நான் காருக்குள் ஏறும் பொழுது என்னுடைய அப்பாவிடம் போன் செய்து நிச்சயமாக இதைப் பற்றி யோசிக்கலாம் என்று சொன்னேன். காரணம் அவர் இந்த சந்திப்புக்கு முன்னால் என்னிடம் அவ்வளவு ஆர்வமாக பேசினார்

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பழக ஆரம்பித்த  போது மிக அதிகமான கட்டுப்பாடுகள் இருந்தன. மற்றவர்கள் போல நாங்கள் டேட் செய்யவில்லை. நாங்கள் பெரும்பாலும் சாட்டிங்கில்தான் அதிகமாக பேசினோம். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இப்படியே நாங்கள் இருவரும் நிறைய பேசினோம்; நான் அவர்களது குடும்பத்தை பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன்;  இதனையடுத்து தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்

பெண்ணுக்கு முதன்முறையாக திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டால், அத்தோடு வாழ்க்கை என்பது முடிந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழ்க்கை சென்று கொண்டே தான் இருக்க வேண்டும். அவரவர் கர்மாவிற்கு ஏற்ப செயல்கள் நடந்தே தீரும்.” என்று பேசினார் 

நன்றி: சினிமா விகடன் 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.