Actor Soori: 2030 வரை Dates இருக்காது, தீபிகாவுடன் சாட்டிங்! சிவா, விஜய்சேதுபதியுடன் Fun - கருடன் விழாவில் சூரி கலகல
ஒரு நாள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்பதை கருடன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி கலகல பேச்சு மூலம் சிரிக்க வைத்தார். ஒரே மேடையில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து சூரியை வைத்து Fun செய்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் கருடன். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தை வாழ்த்தி பேசினர்.
அத்துடன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் ஒரே மேடையில் உரையாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சிவகார்த்திகேயன், விஜய் உடம்புக்குள் சென்றால் சூரி கலகல பதில்
நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நடிகர் சூரியிடம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உடம்பினுள் கூடுவிட்டு கூடு பாய்ந்தால் என்ன நடக்கும் என நகைச்சுவையாக கேட்டார். இதற்கு தனது பாணியில் மிகவும் குறும்புத்தனமாக பதில் அளித்தார் சூரி.
சிவகார்த்திகேயன் உடம்பில் புகுந்தால், "உடனடியாக 10 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிட்டு வந்துருவேன். அப்புறம் 2030 வரை Dates இருக்காது. பெரிய தொகையை வாங்கி பேங்க்ல போட்டி உட்கார்ந்துருவேன்."
மாமா விஜய்சேதுபதி உடம்பில் புகுந்தால், "இங்கேயும் நிறையபேர் கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டு, அப்படியே இந்தி பக்கம் போய் அங்க ஒரு 10 செக் வாங்கிடுவேன்.
அப்படியே ஆமிர்கான என்னா மாமான்னு கேட்டுட்டு, ஷாருக்கான வா மச்சான் சாப்பிடலாம்னு சொல்லிட்டு, அப்புறம் தீபிகா படுகோனே கிட்ட ஒரு 5 நிமிஷம் சாட் பன்னுவேன்" என்றார்
விடுதலை படத்தை விட மேலே இருக்கும்
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, "சீரியஸாக நடிப்பவர்களால் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. அது கஷ்டமான விஷயம். ஆனால் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் சீரியஸான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்கள்.
சூரியை வைத்து நான் தயாரித்திருக்கும் கொட்டுக்காளி திரைப்படம், விடுதலை படத்தை விட ஒரு படி மேலாக இருக்கும் என நம்புகிறேன்" என்று கூறினார்.
இயற்கையும் கடவுளும் சேர்ந்து ஆசீர்வதிப்பாங்க
மனிதர்களைக் கையால்வதில் செந்தில் குமார் வல்லவர் என வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார். எனவே அவருடன் இணைந்து கண்டிப்பா ஒரு படம் பண்ணுவேன். நானும் சூரியும் சில படங்கள்தான் சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். ஒரு சீனுக்கு காமெடியை மட்டும் தேடிய மூளை, திடீரென கதையின் நாயகனாக நடிப்பது ரொம்ப கடினம்.
விடுதலைக்கு பிறகு கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்கள் சூரி ஹீரோவாக வளருவதற்கு உதவும். சூரியை இயற்கையும் கடவுளும் சேர்ந்து ஆசீர்வதிப்பாங்க. அடுத்த முறை மதுரை மட்டுமல்லாமல் அகில உலக, எனப் போட்டு நிறைய ஊரிலிருந்து பேனர் வரட்டும்" என்று பேசினார்.
மேடையில் சூரியை வைத்து Fun செய்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்தபோது இரவு முழுவதும் தம் அடித்தவாறே அவரது கதையை கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கையை படமாக பண்ணால் சுவாரஸ்யமாக இருக்கும். அவரது வாழ்க்கை பயணம் அப்படிப்பட்டது தான்.
நீங்கள் எனக்கும், சிவாவுக்கும் எதாவது அறிவுரையை சொல்லுங்கள் என்று விஜய் சேதுபதி கூறி, அதற்கு ஆமோதித்த சிவகார்த்திகேயன், "சூரி ஈஸ்ட்மேன் கலர் காலத்தில் இருந்து நடித்து வருகிறார். எனவே அவர்தான் எங்களுக்கு அட்வஸை தரணும்" என்றார்.
இதற்கு பதில் அளித்த சூரி," நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் கருப்பாக, ஒல்லியாக கதை நாயகன் விட்டு விடாமல் எங்கு சென்றாலும் கூட கூட்டிட்டு போங்க" என்று கூறினார்.
கருடன் திரைப்படம்
எதிர்நீச்சல், கொடி திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் கருடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் சசிக்குமார், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
நெடுஞ்சாலை படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.
படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் மே 31ஆம் தேதி ரிலீசாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்