கதாநாயகன் சூரியின் அடுத்த அவதாரம்.. ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி! - யார் டைரக்டர் தெரியுமா?
கதாநாயகன் சூரியின் அடுத்த அவதாரம்.. ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி! - யார் டைரக்டர் தெரியுமா?
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார்.
ஜோடி யார்?
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள படத்தின் பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
கருடன் - கதாநாயகன்
கருடன் படத்தின் வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறாராம்
தொழில் நுட்ப குழு விபரம்
ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு, தினேஷ் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
டாபிக்ஸ்