ஒரே ஃப்ரேமில் நேரு, காந்தி, வல்லபாய்.. கவனம் ஈர்க்கும் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்’ ட்ரெய்லர்..எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரே ஃப்ரேமில் நேரு, காந்தி, வல்லபாய்.. கவனம் ஈர்க்கும் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்’ ட்ரெய்லர்..எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?

ஒரே ஃப்ரேமில் நேரு, காந்தி, வல்லபாய்.. கவனம் ஈர்க்கும் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்’ ட்ரெய்லர்..எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?

Kalyani Pandiyan S HT Tamil
Nov 10, 2024 05:15 PM IST

'ஃப்ரீடம் அட் மிட்நைட்’ என்ற பெயரில் வெப் தொடர் வெளியாக இருக்கிறது. இதில் காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

ஒரே ஃப்ரேமில் நேரு, காந்தி, வல்லபாய்.. கவனம் ஈர்க்கும் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்’ ட்ரெய்லர்..எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
ஒரே ஃப்ரேமில் நேரு, காந்தி, வல்லபாய்.. கவனம் ஈர்க்கும் 'ஃப்ரீடம் அட் மிட்நைட்’ ட்ரெய்லர்..எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?

எந்த புத்தகம் தெரியுமா? 

லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகளை ஆழமாக ஆராய்கிறது என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மகாத்மா காந்தியாக சிராக் வோஹ்ரா, சர்தார் வல்லபாய் பட்டேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிஃப் ஜகாரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சா, லிகாட் அலிகானாக ராஜேஷ் குமார், கே.சி.சங்கர் வி.பி. மேனன் கதாபாத்திரத்தில், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்க்கிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ கல்லம், சிரில் ராட்கிளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நவம்பர் 15 முதல் சோனி லிவ் ஓடிடியில் மட்டும் ஸ்ட்ரீமிங் ஆகும்  ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ மூலம் இதற்கு முன்பு கண்டிராத வரலாற்றை பிரதிபலிக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக, ஓடிடி தளங்கள் பற்றி ஜீ5 தலைமை அதிகாரி மனிஷ் கல்ரா அளித்த பேட்டி இங்கே!

பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களங்களுக்கு ஜீ 5 அளிக்கும் பங்கு என்ன?

பெண்களை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் ஜீ 5 ஓடிடி தளத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். காரணம், இது பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தரப்பட்ட பெண்களின் அனுபவங்களை வழங்குகிறது.

பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்கள் உள்ளடக்கிய உண்மைக்கதைகளை உருவாக்குவது எங்களின் கடமையாகும். லவ் சித்தாரா, அயலி, தி கிரேட் இந்தியன் கிச்சன், கோலமாவு கோகிலா உள்ளிட்டவை பெண்களை மையப்படுத்தி நாங்கள் தேர்ந்தெடுத்த கதைகள் ஆகும்.

பெண் படைப்பாளிகளுடன் பணியாற்ற விருப்பம்

குறிப்பாக பெண் படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். நாங்கள் அவர்களுக்கு, களத்தை உருவாக்கிக்கொடுத்து அவர்களிடம் இருந்து நுணுக்கமான கதைகள் வெளியே வருவதற்கு உதவியாக இருக்கிறோம்.

குறிப்பாக இந்திய மகளிர் தினத்தை முன்னிட்டு "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" தயாரிப்பாளர் குனீத் முங்காவைக்கொண்டு #நோ நாரி (பெண்) நோஸ்டோரி என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கேமராவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, இது போன்ற முன்னெடுப்புகளை முன்னெடுப்பதன் வாயிலாக, நமது கதை சொல்லல் முறையிலும் ஒரு வடிவத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இதில், பெண்களுக்கான அதிகாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், எங்களின் இருக்கும் கதைகளின் தரத்தையும் மேம்படுத்துகிறது.

ஜீ 5 வளர்ந்து வரும் மற்றும் பிரபலமான இயக்குநர்களிடம் எந்த மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறது?

 ஜீ 5 வளர்ந்து வரும் மற்றும் வெற்றிப்பெற்ற இயக்குநர்களிடம் இருந்து தனித்துவம் மற்றும் உண்மைக்கு நெருக்கமான, அதே நேரத்தில், நம் நாட்டில் பரந்து பட்டு கிடக்கும் வேறுபட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் விதமான கதைகளை எதிர்பார்க்கிறது.

வெப் சீரிஸ் தயாரிப்பை பொருத்தவரை, கதை சொல்லலில் தேர்ந்த திறமை, படைப்பாற்றல் மற்றும் தயாரிப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வது உள்ளிட்டவற்றை படைப்பாளர்கள் வலுபடுத்த வேண்டும்.

கதை சொல்லலில் புதிய உத்தி, புதிய கதைக்களம் மற்றும் பார்வையாளர்களை எமோஷனலாக என்கேஜாக வைத்திருக்கும் விஷயங்களை ஜீ 5 அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இறுதியாக நல்ல கன்டென்டை கொடுப்பதே ஜீ 5 யின் அடிப்படையான நோக்கம் என்றாலும், ஜீ 5 க்கு மீண்டும் வரும் அளவிலான என்கேஜிங்கான கதைகளையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று பேசினார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.