MANMADHA RASA SONG SECRET: பாகவதர் பாடல்..லாவக உருவல் - பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தனுஷ் பாடல் எழுதிய ரகசியம் இதுதான்
Manmadha Rasa Song Secret: பாகவதர் பாடல், லாவக உருவல் என பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தனுஷ் பாடல் எழுதிய ரகசியத்தை பாடலாசிரியர் யுகபாராதி பகிர்ந்துள்ளார்.

Manmadha Raasa Song Secret: தமிழில் சூப்பர் ஹிட் குத்து பாடல்கள் என்றால் நினைவுக்கு வரும் பாடல்களின் ஒன்றாக தனுஷ் - சாயா சிங் மிரட்டலான ஆட்டத்தில் அமைந்திருக்கும் மன்மத ராசா பாடல் அமைந்திருக்கும். தனுஷ் நடித்த மூன்றாவது படமான திருடா திருடி படத்தில் வரும் இந்த பாடலை பாடகர்கள் ஷங்கர் மகாதேவன், மாலதி ஆகியோர் பாடியிருப்பார்கள்.
பாடல் வெளியான சமயத்தில் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஆக்கிரமித்து இருந்த இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருப்பார். தினா இசையமைத்திருப்பார்.
கருப்பு நிற டிரஸ் அணிந்து, மணல் மேடு நிறைந்த பகுதியில் தெறிக்கவிடும் குத்தாட்டத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. எளிமையான வரிகளை கொண்ட பாடல் அப்போது எஃப்களில் தவறாமல் ஒலிக்கும் ட்ரெண்ட் பாடலாக இருந்தது.
