Snehan: சப்தங்களுக்குள் அடங்கிய தமிழ் சினிமா.. பாடகர் சினேகன் ஆதங்கம்!-snehan tamil cinema is immersed in sounds singer snehan aadhangam - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Snehan: சப்தங்களுக்குள் அடங்கிய தமிழ் சினிமா.. பாடகர் சினேகன் ஆதங்கம்!

Snehan: சப்தங்களுக்குள் அடங்கிய தமிழ் சினிமா.. பாடகர் சினேகன் ஆதங்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2024 11:52 AM IST

கடந்த ஐந்து வருடங்களாக சப்தத்திற்குள் சினிமா மாட்டிக் கொண்டுள்ளது என தெரிவித்த அவர் அதனை மீட்டெடுக்க வேண்டியது ரசிகர்களாகிய நம்முடைய பணி என்றார்.

பாடகர் சினேகன்
பாடகர் சினேகன்

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தை சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சினேகன் கூறியதாவது, நான் ஏறத்தாழ 3000 பாடல்களை கடந்து எழுதி விட்டேன். 2 படங்களுக்கு வசனம் எழுதி வருகிறேன். மேலும் சில படங்களில் நடித்து வருகிறோன் என்று தெரிவித்தார். மேலும் இலக்கியம் சார்ந்த பல பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த ஆண்டில் ஒரு பெரிய நாவலை தயாரித்து வருகிறேன். என்ற அவர், மேலும் 3 கவிதை தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள் இந்த ஆண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.

முன்பெல்லாம் கதைகளில் பல கிளைகள் இருக்கும் எனவும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பல விஷயங்களை கூற முடியும் என தெரிவித்தார். ஆனால் தற்போதெல்லாம் ஒரு நிகழ்வே கதையாக மாறிவிடுவதால் அழுத்தமான பாடல்களை திரைத்துறையில் வைக்க முடியவில்லை என்ற கவலை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இன்றைய சூழலில் ஆரோக்கியமான பாடல்கள் குறைவு தான் என்பதை ஒப்புக் கொள்வதாக தெரிவித்த அவர் அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். கவிஞர்கள், பாடகர்கள், இயக்குனர்கள் எல்லாம் வெவ்வேறு இடத்திலிருந்து செல்போன் மூலமாக தகவல்களை பகிர்ந்து கொள்வதனை ஒரு ஆரோக்கியமான விஷயமாக நான் கருதுவதில்லை என தெரிவித்தார்.

மேலும் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி தகவல்களை பரிமாறிக் கொண்டு பணி செய்யும் பொழுது தான் ஆரோக்கியமான பாடல்கள் கிடைக்க பெறும் எனவும் தெரிவித்தார். பாடல்கள் தான் நம் கலாச்சாரத்தின் அடிநாதம் எனவும் கூறினார். அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மிடம் பாடல்கள் உள்ளது என கூறினார். அவர் ஒரு ஃபேசனுக்காக வேண்டுமென்றால், பாடல்கள் இல்லாத படம் எடுக்கலாமே தவிர அது என்றும் நிலைக்காது என்றார்.

இன்னும் சொல்லப்போனால் கடந்த ஐந்து வருடங்களாக சப்தத்திற்குள் சினிமா மாட்டிக் கொண்டுள்ளது என தெரிவித்த அவர் அதனை மீட்டெடுக்க வேண்டியது ரசிகர்களாகிய நம்முடைய பணி என்றார். கேப்டன் விஜயகாந்த் மனித நேயமிக்க மனிதர் என புகழ்ந்த சினேகன் கட்சியையும் தொண்டர்களையும் மீறி அனைவருக்கும் அவர் மேல் ஒரு பிடித்தம் இருந்தது என தெரிவித்தார்.

நானும் அவருடன் இணைந்து பணி புரிந்ததுள்ளேன் எனவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விஜயகாந்த் சினிமாவின் இக்கட்டான நிலையை மீட்டெடுத்ததும் சரி கண்ணுக்குத் தெரியாமல் செய்த உதவிகளும் சரி இது போன்ற அவரது எண்ணங்களும் சிந்தனைகளும் அவரது பெயரும் அடுத்த தலைமுறையினரை சேர வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்றார் மேலும் நடிகர் விஜயகாந்தின் வாழ்வியல் முறையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.