Veera Dheera Soora: வீர தீர சூரனில் அந்த காட்சி.. ‘கலைத்தாயின் இளைய மகன் நீர்’ - நடிகர் எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!-sj surya praised chiyaan vikram veera dheera soora director su arunkumar in his x - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Veera Dheera Soora: வீர தீர சூரனில் அந்த காட்சி.. ‘கலைத்தாயின் இளைய மகன் நீர்’ - நடிகர் எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

Veera Dheera Soora: வீர தீர சூரனில் அந்த காட்சி.. ‘கலைத்தாயின் இளைய மகன் நீர்’ - நடிகர் எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 02, 2024 09:43 PM IST

Veera Dheera Soora: சியான் விக்ரம், நான், சிராஜ் ஆகியோருக்கு இடையேதான் அந்த காட்சி நடக்கிறது. முன்னதாக, அருணும், அவரது உதவி இயக்குநரும் குழுவும் சேர்ந்து இந்தக்காட்சியை கிட்டத்தட்ட 10 நாட்களாக பயிற்சி செய்தார்கள் - எஸ்.ஜே.சூர்யா!

Veera Dheera Soora: வீர தீர சூரனில் அந்த காட்சி.. ‘கலைத்தாயின் இளைய மகன் நீர்’ - எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!
Veera Dheera Soora: வீர தீர சூரனில் அந்த காட்சி.. ‘கலைத்தாயின் இளைய மகன் நீர்’ - எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

அதில் அவர் பதிவிடும் போது, “நேற்றைய தினம் இரவு மதுரையில் இயக்குநர் அருண்குமார், வீர தீர சூரன் படத்தின் சூப்பரான எபிசோடை எடுத்தார். இந்த காட்சி க்ளைமாக்ஸூக்கு முன்னதாக வருகிறது. சியான் விக்ரம், நான், சிராஜ் ஆகியோருக்கு இடையேதான் அந்த காட்சி நடக்கிறது. முன்னதாக, அருணும், அவரது உதவி இயக்குநரும் குழுவும் சேர்ந்து இந்தக்காட்சியை கிட்டத்தட்ட 10 நாட்களாக பயிற்சி செய்தார்கள்

3 இரவுகள் ஒத்திகை!

அதன் பின்னர் நடிகர்களை வரவழைத்து 3 இரவுகள் அந்த காட்சிக்கான ஒத்திகையை நடத்தினார். நேற்று காலை 5.05 மணிக்கு அந்த காட்சியை நாங்கள் படமாக்கி முடித்தோம். ஒரு வார்த்தையில், இயக்குநர் அருண்குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கலைதாயின் இளையமகன் அய்யா நீர்..” வாழ்த்துகள் ஷிபு தமீன்ஸ் என்று பதிவிட்டு இருக்கிறார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ‘சிந்துபாத்’ ‘சித்தா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அருண்குமார். இதில் சித்தா திரைப்படம் இவருக்கு பெரிய பேரை வாங்கித்தந்ததோடு, வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. சித்தார்த் கதாநாயகனாக நடித்த அந்தப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

வீர தீர சூரன் வாய்ப்பு

இந்தப்படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பு அவருக்கு விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் இணையும் வாய்ப்பைக் கொடுத்தது. இந்தப்படத்தில் விக்ரமுடன், துஷாரா விஜயன், சுராஜ் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விகரமுக்கு அடுத்ததாக தங்கலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார்தான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து முன்னதாக மாளவிகா அளித்த பேட்டி இங்கே!

உடலில் சொறி ஏற்பட்டது

படத்தின் மிக நீண்ட கால அட்டவணை கோலாரில் நடைபெற்றது. இந்த படத்துக்காக அனைவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினோம்.

எனது கதாபாத்திரத்துக்காக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஒப்பனைக்கு உட்கார வேண்டியிருந்தது. 10 மணி நேரம் மேக்கப்பில் இருந்த பிறகு எனக்கு சொறி ஏற்பட்டது. படப்பிடிப்பின் போது மேக்கப்புடன் கொளுத்து வெளியில் நடித்தோம். இதனால் உடலிலும், சருமத்திலும் தீக்காயங்கள் போல் ஏற்பட்டது.

இந்த படத்தில் நடித்த பிறகு தோல் மருத்துவர், கண் மருத்துவர் உட்பட குறைந்தது ஐந்து மருத்துவர்களை நான் சந்தித்தேன்.

கேலி செய்தார் என நினைத்தேன்

படத்தில் ஒரு காட்சிக்காக, இயக்குநர் ரஞ்சித் என்னை எருமை மாடு மீது சவாரி செய்ய வைத்தார். எருமையுடன் ஒரு காட்சி இருந்தது. நான் படப்பிடிப்புக்கு தயாராகி கொண்டிருந்தபோது எருமைாடு நிற்பதை பார்த்தேன்.

இதைக்கண்ட ரஞ்சித் சார், எருமைமாடு எனக்கு பிடிக்குமா என்று கேட்டார். நான் ஆம் என்று சொன்னதும், அவர் என்னை அதன் மீது உட்காரச் சொன்னார். அவர் கேலி செய்கிறார் என்று நான் நினைத்தேன்.

ஆனால் அவர் என்னிடம் மீண்டும் கேட்டார். இறுதியாக, நான் அதில் சென்று அமர்ந்தேன். அந்தக் காட்சியைப் பற்றி அவர் என்னிடம் முன்கூட்டியே சொல்லாததால், அவர் என்னிடம் கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன்.

இந்தத் திரைப்படம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது." என்றார்

 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.