12 Years of Marina: 12 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மெரினா’.. சிவகார்த்திகேயன் சாதித்த கதை!
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படமான மெரினா வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் அவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பிஸி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்து, திருச்சியில் தனது கல்லூரி படிப்பை முடித்து, ஒரு மேடை காமெடி கலைஞராக சென்னை நோக்கி தனது பயணத்தை துவங்கியவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் கல்லூரியில் துவங்கிய இந்த சினிமா ஆசை, சென்னைக்கு வந்ததும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோக்களில் அவரை பங்கேற்க வைத்தது.
பின்னர் அந்த வெற்றியால் அதே தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறி தனது பயணத்தை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருந்தார். இதன் மூலம் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. துடுக்கான பேச்சும், சட்டென்று இவர் போடும் கவுண்டர்களும் இவரை திரைத்துறை பக்கம் நகர்த்தியது.
அந்த பயணத்திற்கு முதல் வித்திட்டவர் இயக்குநர் பாண்டிராஜ். அவரது இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'மெரினா' திரைப்படம் மூலம் தான் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் ஓவியா, பக்கோடா பாண்டியன், ஜெயபிரகாஷ், சதிஷ் ஜித்தன் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிவாவின் நகைச்சுவை நன்றாக வொர்க் அவுட் ஆகியிருந்தது. கிரிஷ் ஜி இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், 'மனங்கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே', 'காக்கிச்சட்டை' என்று வெற்றி படங்களின் அணிவகுப்பை தொடங்கினார். தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படமான மெரினா வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ரசிகர்களுக்கு புதுமையான விருந்தை அளித்த 'மெரினா' 2012 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 3-ல் திரையரங்குகளில் ரிலீஸானது. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளி வந்து இன்றோடு 12 ஆண்டுகளை கடந்திருக்கிறது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 12 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் சிவகார்த்திகேயன் என்ற நடிகரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்