Sivakarthikeyan: சம்பளமா? படமா? - அயலானுக்காக தியாகம் செய்யும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடித்து முடித்து உள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனிடம் 2018 ஆம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கதை சொல்லி ஆரம்பமானது தான், அயலான்.
சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், கொரோனா ஊரடங்கு மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாக பல வருடங்களாக போஸ்ட் புரொடக்ஷனிலேயே இருந்தது.
இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் அயலான் படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கமால் நடித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இது தொடர்பாக Behindwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில், ”சம்பளமா? படம் வெளியில வரணுமா? என்ற கேள்வியாக இருந்தது.
இது ஒரு விஷன், நம்ம ஊருல, நம்மலால் இப்படியொரு பட்ஜெட்டில் பண்ண முடியும், என்ற அடிப்படை விஷயம் வைத்து தான் படத்தை ஆரம்பித்தோம்.
இந்த படம் செய்யும் போது பாகுபலி தவிர வேறு எந்த பான் இந்தியா படம் என்ற வார்த்தை பாகுபலி போன்ற படங்கள் வந்த பிறகு நிறைய பான் இந்தியா படம் வந்துவிட்டது.
தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள் வந்தது. அதனால் சம்பளம் வேண்டாம் என்று கூறி படத்தை வெளியிட்டால் போதும் என்று முடிவெடுத்துவிட்டேன் “ என்றார்.
நேற்று (டிச.26) அயலான் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “ பொங்கலுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் அந்த படங்கள் அடித்து துவம்சம் பண்ணட்டும். என்னை சிலர் சூப்பர் என்று சொல்வாங்க, சில பேரு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லுவாங்க.
சில பேரு திட்டுவாங்க. ஆனால் நான் இதை எல்லாம் எடுத்துக்குறதே இல்லை. என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல, என்னை பிடித்தவர்களுக்காக நான் ஓடிக் கொண்டு தான் இருப்பேன்” என சுருக்கமாக பேசி முடித்தார்.
நன்றி: Behindwoods TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்