'சிவாஜி, கமல் மட்டும் தான் நடிகர்கள்' - ஆவேசமாக பேசிய நடிகர் சிவக்குமார்!
Actor sivakumar Speech: நான் நடிகர் என்றாலும் நல்ல நடிகர் என்ற லிஸ்டில் எப்போதும் என்னை சேர்த்துக் கொள்ளவே மாட்டேன்- நடிகர் சிவக்குமார்.
சென்னை வடபழனியில் 'திருக்குறள் 100 வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் சிவக்குமார் பேசியது: 1965-ல் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். 40 ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்கள், சின்னத்திரையிலும் பணியாற்றி இருக்கிறேன். 2005 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி என்னுடைய 64 வயதில் இனிமேல் மேக்கப் போட்டு நடிக்கக் கூடாது என சத்தியம் செய்து கொண்டேன்.
ஏழு ஆண்டுகளில் நான் வரைந்த ஓவியங்களை இந்தப் பிறவியில் வரைய முடியாது. நான் பெரிய நடிகர் கிடையாது. அதை என்னுடைய புத்தகத்திலே குறிப்பிட்டிருக்கிறேன். நான் பெரிய நடிகர்களாக ஒத்துக்கொள்வது சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இரண்டு பேர் மட்டும்தான். வேறு யாரையும் அந்த லிஸ்டில் வைக்கவில்லை. அவரவர்களுக்கு திறமை இருக்கிறது..அவர்களது திறமையை குறை சொல்லவில்லை. நான் நடிகராக ஏற்றுக்கொண்டது சிவாஜி, கமல்ஹாசன் மட்டும் தான்.
அதாவது நான் நடிகர் என்றாலும் நல்ல நடிகர் என்ற லிஸ்டில் எப்போதும் என்னை சேர்த்துக் கொள்ளவே மாட்டேன். 195 படங்களில் நடித்திருந்தாலும் அந்த லிஸ்டில் என் பெயரை இணைத்துக் கொள்ளவே மாட்டேன். இந்த பெயர், புகழ் எல்லாம் எனக்கு சினிமா மூலம்தான் கிடைத்தது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நான் சினிமாவில் சாதித்தேன் என்பது பெரிய விஷயம் கிடையாது. என்னுடைய அடையாளமாக எதிர்காலத்தில் இருக்கக்கூடியது எனது ஓவியங்களும், நான் பேசிக்கொண்டிருக்கும் ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் மட்டுமே தான்." இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்