66 Years of Uthama Puthiran: முதல் முறையாக இரட்டை வேடம்! நல்லவன், கெட்டவனாக நடித்து வசூல் மன்னனாக மாறிய சிவாஜி கணேசன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  66 Years Of Uthama Puthiran: முதல் முறையாக இரட்டை வேடம்! நல்லவன், கெட்டவனாக நடித்து வசூல் மன்னனாக மாறிய சிவாஜி கணேசன்

66 Years of Uthama Puthiran: முதல் முறையாக இரட்டை வேடம்! நல்லவன், கெட்டவனாக நடித்து வசூல் மன்னனாக மாறிய சிவாஜி கணேசன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 07, 2024 05:10 AM IST

நல்லவன், கெட்டவன் இரட்டை வேடங்களில் முதல் முறையாக நடித்த உத்தம புத்திரன் படத்தை, அதே டைட்டிலுடன் நடிப்பதற்கு எம்ஜிஆரும் முயற்சி செய்தார். ஆனால் இறுதியில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி சிறந்த கிளாசிக் திரைப்படமாக மாறியுள்ளது.

உத்தம புத்திரன் படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார்
உத்தம புத்திரன் படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார்

பார்த்திபன், விக்ரமன் என நல்லவன், கெட்டவன் என மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். ஹீரோயினாக பத்மினி, ராகினி ஆகியோரும், எம்என் நம்பியார், கேஏ தங்கவேலு, ஓஎகே தேவர், கண்ணாம்பா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

உத்தம புத்திரன் ஒரிஜினல் படமே தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும். இதில் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பியு சின்னப்பா, டிஎஸ் பாலையா, என்எஸ் கிருஷ்ணன், எம்வி ராஜம்மா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 18 ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் மையக்கதையை அப்படியே வைத்து ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்தார் சி.வி. ஸ்ரீதர்.

அதேபோல் தொழில்நுட்பத்திலும் ஜும் லென்ஸ் வைத்து முதலில் படமாக்கப்பட்ட சினிமாவாக உத்தம புத்திரன் உள்ளது.

இந்த படத்தை உருவாக்க முறையான அனுமதியை பெற்றிருந்தார் சி.வி. ஸ்ரீதர். ஆனால் இதே கதையை, இதே டைட்டடிலில் உருவாக்கி எம்ஜிஆரும் போட்டி போட்டார். சிவாஜியின் உத்தம புத்திரன் குறித்து பேப்பரில் விளம்பரம் வெளியிட்டபோது, எம்ஜிஆர் நடிப்பிலும் அதே பெயரில் படம் உருவாக இருப்பதாக விளம்பரம் வெளியானது.

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருந்த எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் ஆகியோர் ஒரே கதை, ஒரே டைட்டிலுடல் மோதப்போவது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது என்.எஸ். கிருஷ்ணன் தந்த அறிவுரையால், எம்ஜிஆர் உத்தம புத்திரன் எடுக்கும் முயற்சியை கைவிட்டார். ஆனாலும் இரட்டை வேடத்தில் நடிக்க நாடோடி மன்னன் என்ற படத்தை உருவாக்கி வெற்றியும் கண்டார்.

இதற்கிடையே சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி பெரிதும் கொண்டாடப்பட்டது உத்தம புத்திரன். எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனான எம்என் நம்பியார், சிவாஜிக்கும் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இரட்டையர்களாக பிறக்கும் சிவாஜி கணேசன் எதிர்பாராத விதமாக குழந்தையிலேயே பிரிந்து ஒருவர் நல்லவனாகவும், இன்னொருவன் கெட்டவனாகவோ வளர்கிறார்கள். இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்றிணைவதும், அதற்கு காரணமாக அமையும் சம்பவங்களே படத்தின் ஒன்லைன்

படத்துக்கு மருதகாசி, கு.மா, பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுந்தர வாத்தியார், கே.எஸ். கோபால கிருஷ்ணன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பாடல்கள் எழுத அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. டிஎம்எஸ் குரலில் யாரடி நீ மோகனி என்ற பாடல் சிறந்த கிளாசிக் பாடலாக ஒலித்து வருகிறது.

சிவாஜி கணேசனை வசூல் மன்னனாக மாற்றிய இந்த படம் அந்த காலகட்டதிலேயே கோடிகளில் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. சிவாஜி கணேசன் நடிப்பில் சிறந்த கல்ட் கிளாசிக் படமாக இருந்து வரும் உத்தம புத்திரன் வெளியாகி இன்றுடன் 66 ஆண்டுகள் ஆகிறது.

இதே கதையத்தான் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து வடிவேலு கதாநாயகனாக நடிக்க இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை உருவாக்கியிருப்பார்கள். இந்த படமும் சூப்பர் ஹிட்டானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.