53 Years of Savaale Samali: சிவாஜி கணேசன் 150வது படம்! ஜெயலலிதா க்யூட் நடிப்பு - வர்க்க அரசியல் பேசி வெற்றி கண்ட படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  53 Years Of Savaale Samali: சிவாஜி கணேசன் 150வது படம்! ஜெயலலிதா க்யூட் நடிப்பு - வர்க்க அரசியல் பேசி வெற்றி கண்ட படம்

53 Years of Savaale Samali: சிவாஜி கணேசன் 150வது படம்! ஜெயலலிதா க்யூட் நடிப்பு - வர்க்க அரசியல் பேசி வெற்றி கண்ட படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 03, 2024 04:35 PM IST

சிவாஜி கணேசன் 150வது படமாக வெளியாகி, வர்க்க அரசியல் பேசி வெற்ற கண்ட படம் ஆக சவாலே சமாளி உள்ளது. படம் முழுக்க சிவாஜி கணேசன் வேட்டி சட்டையில் தோன்றியிருப்பார். படத்தில் ஜெயலலிதா க்யூட் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சிவாஜி கணேசன் 150வது படம். ஜெயலலிதா க்யூட் நடிப்பு, வர்க்க அரசியல் பேசி வெற்றி கண்ட சவாலே சமாளி
சிவாஜி கணேசன் 150வது படம். ஜெயலலிதா க்யூட் நடிப்பு, வர்க்க அரசியல் பேசி வெற்றி கண்ட சவாலே சமாளி

வர்க்க அரசியல் குறித்து கமர்ஷியலாக சொன்ன இந்த படம் தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியை பெற்றது.

விவசாயியாக சிவாஜி கணேசன்

இந்த படம் முழுவதிலும் வேட்டி சட்டையுடன் தோன்றும் சிவாஜி கணேசன், ஏழை விவசாயியாக தோன்றியிருப்பார். ஆர். முத்துராமன் படத்தின் இரண்டாவது ஹீரோவாக நடித்திருப்பார். கதாநாயகியாக ஜெயலலிதா நடித்திருப்பார்.

எம்ஜிஆரிடமிருந்தி விலகி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என ஜெயலலிதா நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இந்த படம் வெளியானது. சிவாஜி கணேசன் - ஜெயலலிதா ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் முக்கிய படமாக சவாலே சமாளி இருந்தது. படத்தில் ஜெயலலிதா க்யூட் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

எம்என் நம்பியார், விஎஸ் ராகவன், நாகேஷ், ஏ. வீரப்பன், டி.கே. பகவதி, சிஆர் விஜய குமார், எஸ் வரலட்சுமி உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

மல்லியம் ராஜகோபால் படத்தை தயாரித்து இயக்கியிருப்பார்.

எம்ஜிஆர் ஸ்டைல் கதையில் கலக்கிய சிவாஜி

ஏழை விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜி கணேசன், ஊர் பண்ணை இடையே சவால் ஏற்படுகிறது. இந்த சவாலில் ஜெயிக்கும் சிவாஜி கணேசன் ஜெயலலிதாவை திருமணம் செய்கிறார். விருப்பம் இல்லாத இந்த திருமணத்தால் துயரம் அடையும் ஜெயலலிதா பிறந்த வீட்டுக்கு செல்கிறார். இறுதியில் சிவாஜியுடன் அவர் இணைந்தாரா என்பது தான் படத்தின் கதை.

இதில், ஏழை விவசாயிகளை நிலத்துக்காக நசுக்கும் பண்ணையாருக்கு எதிராக சிவாஜி கணேசன் குரல் கொடுப்பது இறுதியில் நியாயத்தை பெறுவதும் என படத்தை சுபமாக முடித்திருப்பார்கள்.

பேமிலி டிராமா பாணி கதையில் அதிகம் நடித்து வந்த சிவாஜி பொதுமக்களின் உரிமைக்காக போராடும் விதமாக, அவர்களுக்காக குரல் கொடுக்கும் விதமாகவும் இருக்கும் எம்ஜிஆர் ஸ்டைல் திரைக்கதையுடன் அமைந்திருக்கும் இந்த படத்தின் மக்களின் ஹீரோ கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். சில வசனங்கள் தெறிக்கவிடும் விதமாகவும் அமைந்திருக்கும்.

பாடகி சுசிலாவுக்கு தேசிய விருது

படத்தில் இடம்பிடித்த ஐந்து பாடல்களில் ஒரு பாடலை இயக்குநர் மல்லியம் ராஜகோபால் எழுத, மீதுமுள்ள அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இதில் பாடகர் டிஎம்எஸ் பாடிய நிலவை பார்த்து வானம் பாடல் சிறந்த கிளாசிக் பாடலாக அமைந்துள்ளது.அத்துடன் பாடகி பி. சுசீலா பாட, ஜெயலலிதாவுக்கு சோலோ பாடலாக அமைந்த சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு பாடல் அப்போது இளம்பெண்களின் பேவரிட் ஹிட் லிஸ்டாக இருந்தன. இந்த பாடலுக்காக பாடகி பி. சுசீலா தேசிய விருதும் வென்றார்.

சூப்பர் ஹிட்

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்றாக திகழ்ந்த சவாலே சமாளி 100 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றி படமாக அமைந்தது. தனது 150வது படம் அனைத்து தரப்பினரும் கவரும் விதமான கதையை தேர்வு செய்து நடித்த சிவாஜி கணேசன் அதில் வெற்றியும் கண்டார். கலர் படமாக வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு பிற மொழிகளிலும் உருவாக்கப்பட்ட படமான சவாலே சமாளி வெளியாகி இன்றுடன் 53 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.