45 Years of Justice Gopinath: சிவாஜி கணேசனும் - ரஜினிகாந்தும் முதன்முதலில் இணைந்து நடித்த படம்!
ஜஸ்டிஸ் கோபிநாத் படம் பிளாப் ஆனதற்கு சிவாஜியும், ரஜினியுமே காரணமாக இருந்தது விந்தையான விஷயமாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும் அனைவராலும் ரசிக்ககூடிய சிறந்த குடும்ப திரைப்படமாகவே இந்த படம் உள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக சிவாஜி கணேசன் இறுதிகட்டத்தை நெருங்கி கொண்டிருக்க, வளர்ந்து வரும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்க, இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த படமாக ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியானது. வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுத, யோகாந்த் படத்தை இயக்கியிருப்பார்.
கேஆர் விஜயா, சுமித்ரா கதையின் நாயகிகளாக நடித்திருப்பார்கள். மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
நேர்மை தவறாத நீதிபதியான சிவாஜி கணேசன் அளித்த தவறான தீர்ப்பால் சிறை செல்கிறார் மேஜர் சுந்தரராஜன். அவரது மனைவி அதிர்ச்சியில் தற்கொலை செய்ய குழந்தையை வளர்க்கிறார் சிவாஜி. அந்த குழந்தைதான் இளைஞன் ஆன பிறகு ரஜினிகாந்தாக தோன்றுகிறார்.
சிவாஜியின் வளர்ப்பு மகனாக வரும் ரஜினி, சுமித்ராவை காதலிக்கிறார். சிறை தண்டனை முடிந்து மீண்டும் வரும் மேஜர் சுந்தர ராஜன் செய்ததாக கூறப்படும் குற்றத்தை செய்தவர் சுமித்ராவின் தந்தை என தெரிய வருகிறது. வக்கீலான ரஜினி இந்த பிரச்னையை சரி செய்து சுமித்ராவை கரம் பிடிப்பது தான் படத்தின் கதை.
அந்த காலகட்டத்தில் வெளியான எமோஷனல் டிராமா பாணியலான அமைந்திருந்த இந்த படமும் திரைக்கதை சிறப்பாகவே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்களை பெரிதாக ஈர்க்காமல் போனது.
இதற்கு காரணமாக சிவாஜியும், ரஜினியுமே இருந்தார்கள். சிவாஜியின் 200வது படமான திரிசூலம், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ப்ரியா ஆகிய படங்கள் ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியாகி சில நாள்களில் ரிலீஸ் ஆனதால் இரு நடிகர்கள் ரசிகர்களின் கவனம் அந்தப் படங்களின் பக்கம் திரும்பியது. இதனால் இந்த படம் ரசிகர்கர்கள் கண்டுகொள்ளப்படாமல், உதரி தள்ளப்பட்டது.
இருப்பினும் போட்ட முதலை தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் திருப்பி தரும் வகையில் வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. முதல் முறையாக சிவாஜி - ரஜினி இணைந்த படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும் படத்தில் இருவரும் நடிப்பும் ரசிக்கும் விதமாகவே அமைந்திருக்கும்.
வாலி பாடல் வரிகளில் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இண்டஸ்ட்ரி பிளாப் படமாக இருந்தாலும் சிவாஜி கணேசன் - ரஜினிகாந்தின் முதல் படமான ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்