39 Years of Sandhippu: அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன், பிரபு ! டுவிஸ்ட் மேல் டுவிட்ஸ்ட் கொண்ட பக்கா மசாலா படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  39 Years Of Sandhippu: அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன், பிரபு ! டுவிஸ்ட் மேல் டுவிட்ஸ்ட் கொண்ட பக்கா மசாலா படம்

39 Years of Sandhippu: அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன், பிரபு ! டுவிஸ்ட் மேல் டுவிட்ஸ்ட் கொண்ட பக்கா மசாலா படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 18, 2024 05:46 PM IST

அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன், பிரபு நடித்த சந்திப்பு திரைப்படம், திரைக்கதையில் டுவிஸ்ட் மேல் டுவிட்ஸ்ட் கொண்ட பக்கா மசாலா படமாக ரசிகர்களை கவர்ந்து வெள்ளி விழா கண்டது.

அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன், பிரபு நடித்த பக்கா மசாலா படம்
அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன், பிரபு நடித்த பக்கா மசாலா படம்

இந்தியில் அமிதாப் பச்சன், சத்ருகன் சின்ஹா, ரிஷ் கபூர் நடிப்பில் வெளியாகி, அந்த காலகட்டதிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்த நசீப் என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது.

அண்ணன் தம்பியாக சிவாஜி கணேசன் - பிரபு

இந்தி படத்தின் கதையாக தமிழுக்கு ஏற்றது போல் முழுமையாக மாற்றியமைத்திருப்பார்கள். இந்த படத்தில் தந்தையும், மகனுமான சிவாஜி கணேசன், பிரபு ஆகியோர் இணைந்து நடித்திருந்தாலும் படத்தில் அண்ணன் - தம்பியாக தோன்றியிருப்பார்கள்.

ஒரு கொலையால் பிரியும் சிவாஜி கணேசனின் குடும்பம் பின்னர் இறுதியில் ஒன்று சேர்வது, தனது குடும்பத்தை பிரித்த வில்லன்களை பழிவாங்குவதும் தான் படத்தின் ஒன்லைன்,

இந்திய சினிமாக்களின் அனைத்து மொழிகளிலும் மிகவும் பரிச்சியமான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து ரசிக்க அட என ரசிக்க வைத்திருப்பார்கள்.

அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்

சிவாஜி கணேசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மகன் சிவாஜி பாக்ஸராகவும், கிளப் ஒன்றில் வெய்ட்டராகவும் இருப்பார். ஸ்ரீதேவி அந்த கிளப்பில் பாடகியாக இருப்பார்.

கிளப்பின் ஓனர் எம்.என். நம்பியார் மகனாக விஜயகுமார், ஸ்ரீதேவி மீது ஆசை கொண்டவராக வருவார். அதேபோல் எம்.என் நம்பியார் செய்த கொலையால் தான் சிவாஜியின் குடும்பம் பிரிந்து போகும்.

சிவாஜி காதலியாக ஸ்ரீதேவி இருக்க, அவரது வளர்ப்பு தாய் தான் சிவாஜியை பெத்த அம்மா, சிவாஜியின் நண்பனாக வரும் சரத்பாபுவுக்கு ஸ்ரீதேவி மீது காதல், சரத்பாபு கொலை செய்யப்பட்டவரின் மகன் என திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் சர்ப்ரைஸ்களை வரவழைக்கும் விதமாக உருவாக்கியிருப்பார்கள்.

வில்லனாக எம்என் நம்பியார், மேஜர் சுந்தரராஜன்

படத்தில் வில்லனமாக மேஜர் சுந்தரராஜன், எம்.என்.நம்பியார், ஆர்.என் சுதர்சன் தங்களது கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்கள். சுஜாதா, சரத்பாபு, மனோராமா, ராதா, சத்யராஜ், வடிவுக்கரசி, டெல்லி கணேஷ், விஜய் குமார் உள்பட பலரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார்கள்.

1960களின் காலத்தில் இருந்து இயக்குநராகும், ஏராளமான படங்களை ரீமேக் செய்த இயக்குநருமான சி.வி. ராஜேந்திரன் படத்தை இயக்கியிருப்பார்.

பாடல்கள் ஹிட்

வாலி பாடல்வரிகள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் படத்தில் இடம்பிடித்த பாடல்கள் அந்த காலகட்டத்தில் ஹிட்டாகின. சிவாஜி - ஸ்ரீதேவி இடையிலான டூயட், பிரபு - ராதா இடையிலான டூயட் பாடல்கள் காட்சியமைப்பு ரசிக்க வைக்கும் விதமாக அமைந்திருந்தது.

வெள்ளிவிழா கண்ட படம்

படத்தில் ஏராளமான கிளைக்கதைகளும், திருப்புமுனைகளும் இருந்தபோதிலும் ரசிகர்களை கவரும் விதமாக இருந்த விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக வெள்ளிவிழா கண்டது. இந்தியை போல் தமிழிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கல்லா கட்டியது. சிவாஜி நடிப்பில் வெளியான சிறந்த மசாலா திரைப்படமாக இருக்கும் சந்திப்பு வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.