65 Years of Sabaash Meena: ஹீரோவாக சிவாஜி கணேசன்! காமெடியன் சந்திரபாபுவுக்கு இரட்டை வேஷம் - உள்ளத்தை அள்ளித்தா ஒரிஜினல்
ஆக்ஷன் படத்தின் மூலம் இணைந்த சிவாஜி கணேசன் - பிஆர் பந்தலு கூட்டணி, அடுத்து சபாஷ் மீனா என்ற காமெடி படம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தது. சிறந்த கிளாசிக் காமெடி படங்கள் வரிசையில் இந்த படத்துக்கு இடமுண்டு.
சிவாஜி கணேசன் - சந்திரபாபு கூட்டணியில் ரசிகர்களின் வயிற்ரை புண்ணாக்கும் விதமாக சிரிக்க வைத்த படம் சபாஷ் மீனா. தமிழில் வெளிவந்த பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் முழு நீள காமெடி படமாகவும், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படமாக இருந்த இந்தப் படத்தை இயக்கிய பி.ஆர். பந்தலு.
சிவாஜி கணேசனை வைத்து தங்கமலை ரகசியம் என்ற ஆக்ஷன் கலந்த சாகச படத்தை இயக்கினார் பி.ஆர். பந்தலு. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் திரைக்கதை ஆசிரியரும், வசனகர்ததாவுமான நீலகண்டன், இயக்குநர் பி.ஆர். பந்தலு, சிவாஜி கணேசன் ஆகியோர் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்தனர்.
சபாஷ் மீனா படத்தின் கதை சிவாஜிக்கு பிடித்து போக, அவருக்கு இணையாக அவருடன் படம் முழுவதும் பயணிக்கு கதாபாத்திரமும் ஒன்று இருந்தது. அதற்கு சந்திரபாபு தான் பொருத்தமாக இருப்பார் எனவும், அவரை நடிக்க வைக்கவும் பரிந்துரைத்துள்ளார் சிவாஜி. பின்னர் அவரிடம் கதை சொல்லப்பட்ட நிலையில் நடிக்க சம்மதம் தெரிவித்த சந்திரபாபு அடுத்து ஒரு அதிர்ச்சி கலந்த விஷயத்தை படக்குழுவிடம் கூறியுள்ளார்.
சிவாஜிக்கு கொடுக்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் தனக்கு அதிகமாக தர வேண்டும் என்பதுதான். இதைக்கேட்டு படக்குழு அதிர்ந்து போக, சிவாஜியிடம் விஷயம் சென்ற பின்னர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சந்திரபாபு கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும் என கூறி அவர் கேட்கும் சம்பளத்தை தருமாறும் கூறியுள்ளார். இது அப்போது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டதுடன், இப்போது வரை பேசப்படும் விஷயமாகவே இருந்து வருகிறது.
படத்தின் ஹீரோவாக சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், சந்திரபாபுவுக்கு இரட்டை வேஷம். அதில் ஒன்றாக ரிக்ஷாகாரனாக தோன்றுவார். ஏற்கனவே மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்கும் சந்திரபாபு, அந்த கதாபாத்திரத்தில் காமெடியில் கலாட்டா செய்திருப்பார்.
சிவாஜயின் தந்தையாக எஸ்.வி. ரெங்காராவ், அவரது ஜோடியாக மாலினி, சந்திரபாபுவுக்கு ஜோடியாக சரோஜா தேவி என நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் கதையை அப்படியே காலத்துக்கு ஏற்ப சிறிய மாற்றங்களையும், நடிகர், நடிகைகளை மாற்றியும் இயக்குநர் சுந்தர் சியின் படமான உள்ளத்தை அள்ளித்தா அமைந்திருக்கும். இதனை இயக்குநர் சுந்தரி சியே பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சபாஷ் மீனா படம் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை சிரிப்பலைகளை வரவழைக்கும் விதமாக திரைக்கதை, வசனம் எழுதியிருப்பார் நீலகண்டன். கு.ம. பாலசுப்பிரமணியன் பாடல் வரிகளுக்கு டி.ஆர். லிங்கப்பா இசையமைத்திருப்பார். படத்தில் இடம்பிடித்த சித்திரம் பேசுதடி பாடல் சிறந்த கிளாசிக் பாடலாக இந்த காலகட்டத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சிவாஜி - சந்திரபாபு காம்போ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் குவித்து ஹிட் படமாக மாறியது சபாஷ் மீனா. அத்துடன் அந்த காலகட்டத்தில் பிற தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்ட படமாக மாறியது.
தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக இருந்து வரும் சபாஷ் மீனா வெளியாகி இன்றுடன் 65 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்