தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sivaangi Has Won Immunity Week In Cook With Comali Season 4

CWC Sivaangi: 'சிவாங்கி இந்த வாரம் வேற லெவல்' மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 05, 2023 12:04 PM IST

CWC Immunity Week Winner : குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சிவாங்கி இம்யூனிட்டி பாண்டை வெற்றி பெற்றுள்ளார்

குக் வித் கோமாளி சீசன் 4
குக் வித் கோமாளி சீசன் 4

ட்ரெண்டிங் செய்திகள்

இதுவரை இந்த ஷோவில் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் பங்கேற்ற பல கோமாளிகள் இதன் மூலம் பல வாய்ப்புகளைப் பற்றி சினிமாவில் பிரபலமாக உள்ளனர். இதில் மிகவும் பிரபலமான கோமாளிகள் புகழ் மற்றும் சிவாங்கி. மேலும் தமிழ் சினிமாவில் பல முக்கிய ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களிலும் நடித்த வருகிறார்.

சிவாங்கி
சிவாங்கி

சூப்பர் சிங்கர் போட்டியாளராகக் களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சினிமாவில் பிரபலமாகியுள்ளார் சிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீஷன்கள் நிறைவடைந்துள்ளன தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளன.

இதுவரை கோமாளியாக மக்களை மகிழ்வித்த சிவாங்கி. தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். இவர் செய்து கொடுக்கும் உணவுப் பொருட்கள் பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த வாரம் இம்யூனிட்டி பேண்ட் எபிசோடில் சிவாங்கி வெற்றி பெற்றுள்ளார். தற்போது இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்