Siva Karthikeyan: ‘நம்புனவங்க கைவிட்டுட்டாங்க..அப்பா உசுரு அந்த நாற்காலியிலேயே போயிடுச்சு’ - சிவா எமோஷனல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siva Karthikeyan: ‘நம்புனவங்க கைவிட்டுட்டாங்க..அப்பா உசுரு அந்த நாற்காலியிலேயே போயிடுச்சு’ - சிவா எமோஷனல்!

Siva Karthikeyan: ‘நம்புனவங்க கைவிட்டுட்டாங்க..அப்பா உசுரு அந்த நாற்காலியிலேயே போயிடுச்சு’ - சிவா எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 11, 2023 06:30 AM IST

மாவீரன் மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியவை இவை!

சிவகார்த்திகேயன் பேட்டி
சிவகார்த்திகேயன் பேட்டி

மாவீரன் மிகவும் ஒரு பவர்ஃபுல்லான டைட்டில். இயக்குனர் அஸ்வினின் மண்டேலா படத்தை பார்த்த பிறகு இவருடன் நிச்சயமாக வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் அவர் கோபமாக இருக்கிறாரா இல்லை சோகமாக இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியாது. மிகவும் அமைதியாக தான் பேசுவார். 

நாம் படம் பண்ணலாம் என்று நான்சொன்னபோது அவர் சரி செய்யலாம் என்று சோகமாக சொன்னார். அதைப்பார்க்கும் போது எனக்கு நாம் இவரை நம்முடன் பணியாற்ற வற்புறுத்துகிறோமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் கதையின் ஒன்லைன் ஒன்றைச் சொன்னார். அந்த லைனில் சில சர்ச்சைகள் இருப்பது போல எனக்குத் தோன்றியது. உடனே நான் அது வேண்டாம் வேறு ஐடியா இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னேன்; அப்போதுதான் இந்த மாவீரன் படத்தின் ஐடியாவைச் சொன்னார். இதைக் கேட்ட போது இந்த கதையை எப்படி படமாக மாற்ற முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது அவர் மண்டேலா திரைப்படத்தில் திரைக்கதையில் பெரிதாக சவால் எதுவும் இல்லை ஆனால் இந்தப் படத்தில் எனக்கு சவால் இருக்கிறது என்று சொன்னார்.

சவாலை சந்திக்க தயாராக இருப்பவன் சாதிக்க தயாராக இருக்கிறான்

நான் எப்போதுமே சொல்வது சவாலை சந்திக்க தயாராக இருப்பவன் சாதிக்க தயாராக இருக்கிறான் என்பது. இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் நான் இந்தப்படத்தை ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும்  என்று அஸ்வினிடம் சொன்னேன். தொடர்ந்து அப்படியான ஒரு நல்ல தயாரிப்பாளரை கூட்டி வாருங்கள் என்று கூறினேன்.  அப்படித்தான் அருண் விஷ்வாவை இந்தப்படத்திற்குள் வந்தார். அவருடன் நான் வரும் காலத்திலும் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். 

கைவிட்டு இருக்கிறார்கள்.

நான் நம்பிக்கை வைத்த சில தயாரிப்பாளர்கள் என்னை கைவிட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் நம்பிக்கை வைப்பதை இன்று வரை கைவிடவில்லை. கை விடவும் மாட்டேன். மக்கள் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; அப்படி இருக்கும் பொழுது நான் என்னுடன் இருக்கும் 5 பேரிடம் ஆவது  நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி நான் வைக்கவில்லை என்றால் மக்கள் கொடுத்த அன்பிற்கு நான் உண்மையாக இல்லாமல் ஆகிவிட்டது போல அமைந்து விடும்.

மிஷ்கின் சார் புத்திசாலி

மிஷ்கின் சார் இந்த படத்தில் கமிட்டான பொழுது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். சினிமா பற்றிய அவர் ஏதாவது என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்லுவேன் என்று நினைத்தேன். அவர் எவ்வளவு பெரிய அறிவாளி எவ்வளவு பெரிய புத்திசாலி என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை ஒரு நாளில் கூட அவர் படப்பிடிப்பில் காட்டவில்லை

பிரின்ஸ் மிஸ்ஸிங்

என்னுடைய கடந்த திரைப்படமான பிரின்ஸ் திரைப்படம் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இந்த முறை மிஸ் ஆகாது. 

மாவீரன் அப்பா

என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அப்பா தான் என்னுடைய மாவீரன். செய்கிற வேலைக்கு அவர் அவ்வளவு உண்மையாக இருந்தார். எனது அப்பாவை நான் காவல்துறை உடையில் பார்த்து இருக்கிறேன். ஜெயிலில் காவல்துறை அதிகாரியாக இருந்த பொழுது கிட்டத்தட்ட 2500 கைதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தார். தான் செய்கிற வேலைக்கு எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறார் என்றால் எனது அப்பா வேலை பார்த்த அந்த நாற்காலியிலேயே அவரது உயிரை விட்டார். அப்படி அந்த வேலையை ரசித்து ருசித்து உண்மையாக செய்து அதற்காகவே உயிரை விட்டவர்.” என்றார்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.