Singer Suchitra: மக்கள் செல்வனுக்கு, கார்த்திக் குமாரை பிடிக்காதே - மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா-singer suchitra says her ex husband karthik kumar hates makkal selvan vijay sethupathi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: மக்கள் செல்வனுக்கு, கார்த்திக் குமாரை பிடிக்காதே - மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா

Singer Suchitra: மக்கள் செல்வனுக்கு, கார்த்திக் குமாரை பிடிக்காதே - மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா

Aarthi Balaji HT Tamil
Aug 24, 2024 06:41 PM IST

Singer Suchitra: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா?. கார்த்திக் குமார் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க போகிறாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி உள்ளார் பாடகி சுசித்ரா.

Singer Suchitra: மக்கள் செல்வனுக்கு, கார்த்திக் குமாரை பிடிக்காதே - மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா
Singer Suchitra: மக்கள் செல்வனுக்கு, கார்த்திக் குமாரை பிடிக்காதே - மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக ஒருபக்கமும், இன்னொரு பக்கம் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும், விஜய் டிவி தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிப்பரப்பான மாஸ்டர் செஃப், நம்ம ஊரு ஹீரோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா?. கார்த்திக் குமார் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க போகிறாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி உள்ளார் பாடகி சுசித்ரா.

இது தொடர்பாக அவர் ஒரு பதிவில், I Hate Vijay Sethupathi எனக் கூறிய கார்த்திக் குமார், விஜய் சேதுபதி பற்றி நிகழ்ச்சியில் பேசிய thumbnail தொடர்பான புகைப்படத்தை இணைத்து, கேள்வி எழுப்பி உள்ளார். 

ஏற்கனவே தனுஷ், கார்த்திக் குமார் தொடர்பாக சுசித்ரா பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பியது. அந்த சர்ச்சை முடிவடைதற்குள் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார் சுசித்ரா.

கார்த்திக் குமார் - சுசித்ரா விவாகரத்து

பிரபல எஃப்எம்மில் ஆர்ஜேவாக இருந்த சுசித்ரா, 2005இல் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இந்த ஸ்டார் ஜோடி 2018இல் விவாகரத்து பெற்றனர்.

2016 ஆம் ஆண்டு #suchileaks என்ற பெயரில் பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்களும், அவர்களு குறித்த ரகசிய தகவல்களும் சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சர்ச்சைய கிளப்பியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுசித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2020இல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளாராக பங்கேற்றார். அதன் பின்னர் பேட்டி மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

போட்டியாளர்கள் லிஸ்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் நபர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், நடிகர் ரியாஸ் கான், நடிகை பூனம் பஜ்வா, நடிகர் கார்த்திக் குமார், மூத்த நடிகர் விஜய் குமார், பப்லூ பிருத்விராஜ், பாடகி ஸ்வேதா மேனன், பாடகி கல்பனா, செல்வாக்கு செலுத்துபவர் அமலா ஷாஜி, மகபா ஆனந்த், ரோபோ சங்கர், சோனியா அகர்வால் மற்றும் கிரண் போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.

இந்த ஊகங்கள் உண்மைதானா என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.