Singer Suchitra: ‘சுசி லீக்ஸூக்கு காரணமே தனுஷ்தான்.. அவன் கை கால உடைக்கப்போறேன்’ -சுசித்ரா ஓப்பன் டாக்!
Singer Suchitra: தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தை பொருத்தவரை, இருவரும் தாங்கள் பிரியப் போகிறோம் என்று சொன்னதற்கு பின்னர், ஐஸ்வர்யா நடந்துகொள்ளும் விதத்தையும், தனுஷ் நடந்து கொள்ளும் விதத்தையும் நீங்கள் பாருங்கள். - சுசித்ரா ஓப்பன் டாக்!

Singer Suchitra: ‘சுசி லீக்ஸூக்கு காரணமே தனுஷ்தான்.. அவன் கை கால உடைக்கப்போறேன்’ -சுசித்ரா ஓப்பன் டாக்!
பாடகி சுசித்ரா அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.
சுசி லீக்ஸ்
அதில் அவர் பேசும் போது, “ சுசி லீக்ஸை பொருத்தவரை அது தனுஷ், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அடங்கிய கேங் செய்த ப்ராங். ஆனால் அது என்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியான காரணத்தால், நான் பலியாடாகி விட்டேன்.
அதற்காக, நான் அவனது தனுஷின் கை காலை நிச்சயமாக உடைப்பேன். சட்டத்தைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையே இல்லை. இதற்காக நான் ஜெயிலுக்கு போவதற்கும் தயாராக இருக்கிறேன்.