Singer Mangli: ‘ஓ சொல்ரியா மாமா’ பாடல் பாடகி மீது தாக்குதலா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Mangli: ‘ஓ சொல்ரியா மாமா’ பாடல் பாடகி மீது தாக்குதலா?

Singer Mangli: ‘ஓ சொல்ரியா மாமா’ பாடல் பாடகி மீது தாக்குதலா?

Aarthi V HT Tamil
Jan 23, 2023 08:20 AM IST

பாடகி மங்கலி கார் தாக்கப்பட்டதாக வெளியான பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை என தெளிவுபடுத்தினார்.

பாடகி மங்கலி
பாடகி மங்கலி

இது தொடர்ந்து பேசப்பட்ட காரணத்தினால், பாடகி மங்கலி செய்திக்கு பதிலளித்தார். தாக்குதல் எதுவும் நடக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், "பல்லாரி நிகழ்வு வெற்றியடைந்தது. நான் செய்த சிறந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. மக்கள் என் மீது அபரிமிதமான அன்பு காட்டுகிறார்கள். நிகழ்ச்சியில் நான் நன்றாக நடத்தப்பட்டேன். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறேன்” என ட்வீட் செய்து உள்ளார்.

பெல்லாரி உற்சவத்தில் பாடகி மங்கலி கலந்து கொண்டார். சனிக்கிழமை இரவு கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்லாரி முனிசிபல் கல்லூரி மைதானத்தில் பெல்லாரி விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாடகி மங்கலி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து, திரும்பிக் கொண்டிருந்த அவரது கார் மீது நிகழ்ச்சிக்கு வந்த சிலர் கற்களால் தாக்கியதாக செய்தி வைரலாக பரவியது.

பெல்லாரி உற்சவம் (பெல்லாரி திருவிழா) மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டு நாள் விழாவை அமைச்சர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவில் பாடகி மங்கலி மற்றும் சில பாடகர்கள் கலந்து கொண்டனர். தொகுப்பாளினி அனுஸ்ரீ மற்றும் இசை அமைப்பாளர் அர்ஜுன் குழு நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

‘ராபர்ட்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மங்கிலி. இவருக்கு அடுத்தடுத்து பாடல்கள் பாட வாய்ப்புகள் கிடைத்தன. 'புஷ்பா' திரைப்படத்தில் அவர் பாடியா ஓ சொல்ரியா மாமா பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.