இத்தனை வருஷமா மறைச்ச உண்மை.. டக்குன்னு போட்டு உடைச்சுட்டீங்களே.. சோசியல் மீடியாவில் வைரலாகும் பாடகி..
90'ஸ் கிட்களின் விருப்பமான குழந்தைகள் நிகழ்ச்சி என்றால் அது பென் 10 தான். இந்த தொடரின் பாடலை பாடியது தான் என சின்மயி சமீபத்தில் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

90'ஸ் கிட்களின் ஆஸ்தான சேனல் என்றால் அது கார்ட்டூன் நெட்வொர்க் தான். இதில் ஒளிபரப்பாகும் டாம் அண்டு ஜெர்ரி, பவர் பாப் கேர்ள்ஸ், பாப்பாய், போக்கி மேன், மிஸ்டர் பீன், டீன் டைட்டனஸ் போன்ற கார்ட்டூன் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருந்தாலும், பென் 10 பெரியவர்களும் விரும்பும் தொடராக இருந்தது.
பென் 10
தனக்கு கிடைக்கும் கைக் கடிகாரம் போன்ற ஒரு பொருள், ஏலியன்களையும் கெட்ட சக்திகளையும் அளிக்க பயன்படுத்தப்படும் கருவி என நினைக்கும் சிறுவன், அந்த கைக் கடிகாரத்தின் உதவியால் எப்படி இந்த உலகை காத்து நிற்கிறான் என்பதே கதை.
ஆனால், இந்த தொடரை கொண்டு சென்ற விதம் அனைவரையும் ஈர்த்தது. வெளியில் தன்னை பிளம்பராக காட்டிக் கொள்ளும் தாத்தா, தனது பேரக் குழந்தைகளான் பென் டெனிஷன் மற்றும் குவன் டெனிஷனுடன் பள்ளி விடுமுறை நாட்களைக் கழிக்க விரும்புகிறார். ஆனால், பென்னின் தாத்தா உண்மையில் ஒரு பிளம்பரே அல்ல. அவர் ஏலியன்களை வேட்டையாடும் குழு ஒன்றில் ரகசியமாய் பணியாற்றிவர். அவர் இந்தக் கதையை தனது பேரக் குழந்தைகளிடம் சொல்ல, ஆவலாகி தாத்தாவுடனே ஒட்டிக் கொள்கின்றனர்.