Singappenne serial: காதல் கோளாறில் அன்பு…முட்டிமோதும் மகேஷ்.. ஊசலாடும் ஆனந்தி காதல்.. - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singappenne serial: தன் அண்ணன் வேலுவுக்காகவும் தான் தீமிதிப்பதாக கூற, எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இதை பார்க்கும் வேலு கண் கலங்குகிறான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

சிங்க பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் புரோமூவில் சுயம்பு லிங்கம் தரப்பிற்கும்,அன்பு தரப்பிற்கும் இடையே நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியில் அன்பு தரப்பு ஜெயிக்கிறது. இதையடுத்து மகேஷ், ஆனந்தியின் குடும்பத்தை தொட வேண்டுமென்றால், எங்கள் இருவரை தாண்டிதான் நீ தொட வேண்டும் என்று சுயம்புலிங்கத்திடம் சவால் விடுகிறான்.
இதற்கிடையே ஆனந்தி, தன் அண்ணன் வேலுவுக்காகவும் தான் தீமிதிப்பதாக கூற, எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இதை பார்க்கும் வேலு கண் கலங்குகிறான். இதற்கிடையே அன்பு அம்மனிடம் ஆனந்தியிடம் காதலிச்சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகிறான். அதோடு இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கடந்த எபிசோடில் செவரக்கோட்டைக்கு ஆனந்தியும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களும் கோயில் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக சுயம்பு லிங்கம் மித்ராவுடன் சேர்ந்து கொண்டு திட்டம் தீட்டுகிறான்.