Singappenne: அலப்பறை கிளப்புறோம்.. சிவரக்கோட்டை திருவிழாவுக்கு கிளப்பிய கூட்டம்.. என்ன நடக்குமோ?
Singappenne: சிவரக்கோட்டைக்கு செல்கிறோம் அலப்பறை கிளப்புறோம் என்று ஆனந்தி, அன்பு, மகேஷ், ஜெயந்தி, முத்து உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள்.

நேற்றைய எபிசோட்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து நேற்று ( ஆகஸ்ட் 7 ) , “ஆனந்தியை நீ ஊருக்கு செல் என்று அவரது வார்டன் சொல்ல, அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட ஆனந்தி, என்னை நேற்று ஊருக்குச் செல்லக்கூடாது என்று அவ்வளவு கோபப்பட்டீர்களே என்று கேட்டாள். அதற்கு ஹாஸ்டல் வார்டனோ, நீ இந்த சமயத்தில் கண்டிப்பாக ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல மகிழ்ச்சி வெள்ளத்தில் பூரித்த ஆனந்தி அவருக்கு நன்றி கூறினார்.
ஆனந்திக்கு விடுமுறை
திருவிழாவிற்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்த ஆனந்திக்கு, கருணாகரன் விடுமுறை கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் ஆனந்திக்கு விடுமுறை வாங்கி தருவேன் என்ற முனைப்பில் அன்பு, அவரிடம் சென்று பேசி கொண்டு இருந்தார்.
மகேஷிற்கு போன் செய்து அழகப்பன்
இந்த இடைவெளியில் அழகப்பன், மகேஷிற்கு போன் செய்து, நீங்கள் உள்ளிட்ட அனைவரும், சிவரக்கோட்டை பச்சை அம்மன் கோயில் திருவிழாவிற்கு வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார். அவரின் பேச்சை தட்ட முடியாமல் உடனே மகேஷும் சரி என வாக்கு கொடுத்தார்.