Singapenne Serial: கைக்கு எட்டிய லட்சம்; சிங்கமாக மாறிய ஆனந்தி; ஆட்டத்தை தொடங்கிய மகேஷ்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: “இன்னொரு பக்கம் அழகப்பன் குடும்பத்திடம், உங்களை இந்த பணச் சிக்கலில் இருந்து நான் விடுவிக்க வேண்டும் என்றால், ஆனந்தியை எனக்கு கட்டி வையுங்கள் என்று கிடக்குப் பிடி போடுகிறான். இதைக் கேட்ட கோகிலா, அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறாள்.” - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: அழகப்பன் தன்னுடைய நிலத்தை மீட்பதற்காக 10 லட்சம் வேண்டும் என்று ஆனந்தியிடம் கூறியிருந்தார். இதையடுத்து ஆனந்தி தனக்குத் தெரிந்த ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு உதவிக்குச் சென்றாள். ஆனால் எந்த இடத்திலும் அவளுக்கு பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அன்பும் ஆனந்தியும் வங்கி ஒன்றிற்கு பணம் கேட்பதற்காக சென்றிருந்தார்கள். அப்போது மகேஷ் போன் செய்து அங்கே லோன் வாங்குவதற்காக யாரேனும் வந்திருக்கிறார்களா என்று கேட்கிறான்.
சொக்க லிங்கம் வைத்த செக்
இன்னொரு பக்கம் அழகப்பன் குடும்பத்திடம், உங்களை இந்த பணச் சிக்கலில் இருந்து நான் விடுவிக்க வேண்டும் என்றால், ஆனந்தியை எனக்கு கட்டி வையுங்கள் என்று கிடக்குப் பிடி போடுகிறான். இதைக் கேட்ட கோகிலா, அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறாள்.
இதற்கிடையே, ஆனந்தி தெருவில் வந்து கொண்டிருந்த பொழுது அண்ணன் வேலுவின் நண்பர், ஒருவரை துரத்திக்கொண்டு ஓடி வருவதை ஆனந்தி பார்க்க நேரிடுகிறது. அவர் கையில் ஒரு பையை வைத்திருந்தான். இதைப் பார்த்த ஆனந்தி, அவனிடம் சண்டை செய்து, பையை வாங்கி விடுகிறாள். இதற்கிடையே பின்னால் வேலு வந்து நிற்கிறான். இத்தோடு இன்றைய புரோமோ முடிவடைந்தது.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில், பணத்திற்காக ஒவ்வொரு இடமாக அன்பும் ஆனந்தியும் அலைந்து கொண்டிருந்தார்கள். அன்பு, மகேஷிடம் உதவி கேட்கலாம் என்று கூற, ஏற்கனவே அங்கு சென்று அவரது அம்மா பணம் தர மறுத்த விஷயத்தை ஆனந்தி கூறுகிறாள். இந்த நிலையில் கம்பெனியில் சீட்டு போட்டதிலிருந்து பணத்தை எடுக்கலாம் என்று இருவரும் போய் நிற்க, அந்த சீட்டை முன்னதாகவே ஒருவர் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடம் சென்று சீட்டு பணத்தை கேட்டு உதவிக்கு நிற்க, அவரோ சீட்டு பணம் முழுவதுமாக செலவாகிவிட்டது என்று கையை விரித்து விட்டார்.
அங்கு ஏமாற்றம் அடைந்து நின்ற ஆனந்தியை பார்த்த சக தொழிலாளர்கள், தங்களுடைய வளையல், செயின் உள்ளிட்டவற்றை அவளுக்கு கொடுத்து உதவு முன் வந்தார்கள். இதைப் பார்த்த கருணாகரன், நிறுவனத்திற்குள் யாரும் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்லி கறாராக நின்றான். இதையடுத்து அன்பு, அவரிடம் உங்களுக்கு என்ன தான் பிரச்சினை என்று கேட்க, அவரோ என்ன குரல் எல்லாம் உயர்கிறது என்றும் மிரட்டுகிறார். இதையடுத்து அந்த உதவியும் அவளுக்கு கிடைக்காமல் போகிறது. இதற்கிடையே சேட்டு ஒருவரிடமும் இருவரும் உதவி கேட்டார்கள். ஆனால் அவர் இரண்டு லட்சம் மட்டுமே தர முடியும் என்றும் அதற்கும் அரசு வேலையில் பார்க்கும் ஒருவரின் கையெழுத்து ஜாமீனாக வேண்டுமென்றும் கூறிவிட்டார். இதைப் பார்த்த இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அத்தோடு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்